உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி துணை முதல்வரா? இபிஎஸ்., எதிர்ப்பு

உதயநிதி துணை முதல்வரா? இபிஎஸ்., எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: உதயநிதியை துணை முதல்வராதை எப்படி ஆதரிக்க முடியும்? என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., எனக்கூறினார்.லேம் மாவட்டம் ஓமலூரில் நிருபர்களுக்கு இ.பி.எஸ்., அளித்த பேட்டி: திமுக ஆட்சியில் அம்மா உணவகம் சரியாக நிர்வகிக்கவில்லை. தரமான பொருட்களை வழங்காததால் தரமான உணவு வழங்க முடியவில்லை. மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், வேறு வழியின்றி ஸ்டாலின் அம்மா உணவகத்தை ஆய்வு செய்து நாடகத்தை நடத்தி உள்ளார். உண்மையான அக்கறை இருந்து இருந்தால் 3 ஆண்டுகளில் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த உணவகத்தை கவனிக்காத காரணத்தினால், மக்கள் அதிருப்தி உள்ளனர். சென்னையில் 19 உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டது. குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. கஞ்சா போதையில் கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.பிறகு, உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டால் அதனை ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு, '' உதயநிதி துணை முதல்வராவதை எப்படி ஆதரிக்க முடியும். அவர் கருணாநிதி பேரன். ஸ்டாலினின் மகன். அவ்வளவு தான். தி.மு.க.,வில் எத்தனையோ ஆண்டுகள் உழைத்தவர்கள் இருக்கிறார்கள். அனுபவமிக்க அமைச்சர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தரலாம். ஆனால், அது போன்று எதுவும் நடக்காது. ஏனென்றால் அது குடும்ப கட்சி. என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

siva
ஜூலை 22, 2024 18:14

திமுக குடும்பக் கட்சி அங்கு யாரை நியமிப்பது என்பது அந்தக் குடும்பத்தைப் பொறுத்தது அவர்கள் விரும்பினால், துர்க்கா, சபரீசன் ஏன் இன்பநிதியைக் கூட நியமிக்கலாம் இளவயது முதல்வராக இருப்பார்.


Durai Kuppusami
ஜூலை 22, 2024 07:42

உன் நிலைமையே படு கேவலமாக இருக்கு மத்த கட்சி விஷயம் உனக்கு எதுக்கு.உன் கட்சி பதவிய காப்பாத்த பாரு.தொண்டர்களை மதிச்சு உடனே பதவி விட்டு போ.


Abdul Razak
ஜூலை 22, 2024 07:38

திமுகவில் எத்தனையே மூத்த அமைச்சர்கள் இருக்கிறாங்க


அரசு
ஜூலை 21, 2024 21:18

முதலில் உங்கள் சொந்த கட்சியை காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுங்கள். மற்ற கட்சிகள் என்ன மாற்றம் செய்தாலும் உங்களுக்கு என்ன கவலை, அக்கறை.


sankaranarayanan
ஜூலை 21, 2024 20:40

முதலில் உம்மை பற்றி சற்று சிந்தியுங்கள் சாரூ. கட்சியில் எவ்வளவோ மூத்தவர்கள் இருக்கும்போது இடையில்வந்த எடப்பாடி இப்படியா பேசுவது எப்படி இவர் முதல்வர் ஆனார் தனக்கு என்றால் ஒன்று மற்றவர்களுக்கு என்றால் இன்னொன்றா? கூவத்துக்குறில் கூவி கூவி அழைக்கப்பட்ட நபர் இவர் இப்படி பேசலாமா?


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 20:13

எசப்பாடி தீம்காவில் சேர்ந்து விட்டது போல தீம்காவில் யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்பதைக்கூட சிபாரிசு செய்ய ஆரம்பித்து விட்டார். துணை முதல்வர் பதவி கேட்காதது சிறப்பு. ஆக ஆதீம்கா கோ கையா...


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 21, 2024 20:08

நீங்க மட்டும் ஓ பீயி எஸ் ஐ கூல் பண்ணி வைக்க அவரை துணை முதல்வர் ஆக்கலியா ???? மக்கள் பணத்தை அனுபவிக்க அரசியல் சட்டம் கொடுத்த உரிமையாச்சே ????


Arachi
ஜூலை 21, 2024 19:09

இதைப்பற்றி இவருக்கு என்ன கவலை. தன்னைக்காப்பாற்றிக்கொள்ள ஒரு பலமான கட்சியை மெல்ல சாகடித்து விட்டார்.இவருடைய பொறுப்புகளை வேறு ஒரு தலைவருக்கு விட்டு கொடுப்பாரா.


Anantharaman Srinivasan
ஜூலை 21, 2024 18:15

திமுக ஆதிபாராசக்தி பீடம் போல் வாரிசு நியமனத்தில் ஈடுபட்டுள்ளது.


SVS
ஜூலை 21, 2024 17:56

தி.மு.க.,வை விமர்சிப்பதுடன் மட்டும் நிறுத்திவிடாமல், அதிமுக.,வை வலிமை பெற செய்யுங்கள்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ