மேலும் செய்திகள்
பெரிய மாரியம்மன் கோயில் தேரோட்டம்
31-Mar-2025
திருச்சி:சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று, நடந்த சித்திரை தேரோட்டத்தில், பல ஆயிரம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்கியது.தினமும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு மேல், அம்மன் தேரில் எழுந்தருளியதும், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் தலைமையில், 1,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர் திருவிழாவையொட்டி, இரண்டு நாட்களுக்கு பக்தர்கள், இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
31-Mar-2025