உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பறை இசையை விருப்ப பாடமாக தேர்வு செய்து பயிலுங்கள்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி வலியுறுத்தல்

பறை இசையை விருப்ப பாடமாக தேர்வு செய்து பயிலுங்கள்; மாணவர்களுக்கு கவர்னர் ரவி வலியுறுத்தல்

சாத்தூர்: 'பள்ளிகளில் மாணவர்கள் பறை இசையை விருப்ப பாடமாக தேர்வு செய்து பயில வேண்டும்' என்று வலியுறுத்திய கவர்னர் ரவி, 'பறை இசையை பள்ளி, கல்லூரிகளில் ஏன் பாடமாக்க கூடாது' என கேள்வி எழுப்பி உள்ளார்.விருதுநகர் மாவட்டம், சாத்துார் மேட்டமலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் துவங்கி உள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: பாரதி பறை பண்பாட்டு மையத்தை திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக சமூகத்தில் உண்மையாக சேவை செய்து வருபவர்களுக்கும், கடைக்கோடியில் உள்ள கலைஞர்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி வருகிறார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பத்ம விருது பெற்ற வேலு ஆசான், தற்போது மக்கள் மாளிகையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ராஜ் பவனில் என்னை சந்தித்தபோது, பறை இசையைப் பயிற்றுவிக்க மையம் ஒன்று துவங்க வேண்டும். வீடு ஒன்று வேண்டுமென்று என்னிடம் கேட்டார். இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது பாரதி பறை பண்பாட்டு மையம் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தின் மூலம் குழந்தைகளும், இளைஞர்களும் பறை இசை பயின்று தற்போது தமிழகத்தில் மட்டும் உள்ள பறை இசையை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்.பள்ளிகளில் மாணவர்கள் பறை இசையை விருப்ப பாடமாக தேர்வு செய்து பயில வேண்டும். பறை இசையை பள்ளி, கல்லூரிகளில் ஏன் பாடமாக்க கூடாது?ஐ.ஐ.டி.போன்ற கல்வி நிறுவனங்களில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. பறை இசை குறித்தும் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டால் உலக அளவில் விஞ்ஞானபூர்வமாக இந்த கலையை கொண்டு சென்று உலகம் முழுவதும் பரப்பலாம். 2047ம் ஆண்டு இந்தியா உலக வல்லரசு நாடுகளில் முதன்மை நாடாக விளங்கும். அப்போது இந்த பறை இசையும் நாடு முழுவதும் பரவி இருக்க வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.

பறை இசைத்து...!

பறை இசை கலைஞர் வேலு ஆசான் கவர்னருக்கு பறை இசை கருவியை நினைவு பரிசாக வழங்கினார். நாட்டுப்புற கலைஞர்களை பொன்னாடை அணிவித்து கவர்னர் வாழ்த்தினார். விழாவில் பலர் கலந்து கொண்டனர். இசைக்கலைஞர்களுடன் கவர்னர் ரவி பறை இசைத்து மகிழ்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ravi manickam
டிச 12, 2025 23:13

நாடி நரம்புக்குகள் புகுந்து உற்சாக உணர்ச்சியை உண்டாக்கும் இசைக்கருவிகள் பறை மற்றும் பம்பை.


Suresh
டிச 12, 2025 21:32

மிருதங்கம் போல அதிலே பயில என்ன இருக்கிறது ?


தமிழ்வேள்
டிச 12, 2025 20:03

எங்கேயோ மிளகாய் வைத்தது போல எரியுமே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை