மேலும் செய்திகள்
மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகள் அக்.17ல் திறப்பு
15-Oct-2024
சென்னை:தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணையில் இருந்து, நாளை முதல் 2025 மார்ச் 15ம் தேதி வரை முதல் போக பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் பாசனத்திற்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் நீர் திறக்கப்பட உள்ளது.முதல் 60 நாட்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி நீரும், அடுத்த 31 நாட்களுக்கு வினாடிக்கு 27 கன அடி நீரும் திறக்கப்படும். கடைசி 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கன அடி திறக்கப்படும். இதன், வாயிலாக, தேனி மாவட்டத்தில் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.இதேபோல, மஞ்சளாறு அணையிலிருந்து நாளை முதல் 150 நாட்களுக்கு, முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.
15-Oct-2024