உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கிக்கடன் பெற சிபில் ஸ்கோர் மருந்து விற்பனைக்கு மெட்ஸ்கோர்

வங்கிக்கடன் பெற சிபில் ஸ்கோர் மருந்து விற்பனைக்கு மெட்ஸ்கோர்

மருந்து வினியோகஸ்தர்கள், கடைகளுக்கு மருந்துகளை கடனுக்கு வினியோகிப்பது வாடிக்கையானது. இவற்றில் பல, வாராக்கடன்களாக மாறும். திடீரென கடைகள் மூடப்படும்; அல்லது கடன் வசூலிக்க இயலாத நிலை இருக்கலாம். வினியோகஸ்தர் கொடுக்கும் கடன்களை சிறப்பாக நிர்வகிக்க, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட மெட்ஸ்கோர் என்ற ஸ்டார்ட் - அப் நிறுவனம் உதவுகிறது. மருந்து வினியோகச் சங்கிலிக்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'கிரெடிட் ரிஸ்க்' நுண்ணறிவு தளம்தான் இதற்கு அடித்தளம். தனிப்பட்ட நபர்களுக்கு சிபில் ஸ்கோர் அடிப்படையில், வங்கிகள் கடன் கொடுப்பது போல இதன் செயல்பாடு உள்ளது. எப்படி செயல்படுகிறது சில்லறை விற்பனையாளர் வினியோகஸ்தருக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறார்; எவ்வளவு உடனடியாக செலுத்துகிறார்கள்; அவர்களின் பணம் எவ்வளவு தாமதமாகிறது; பிராந்தியத்தில் உள்ள பிற விநியோகஸ்தர்களுடன் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது உள்ளிட்ட தரவுகள் உருவாக்கப்படுகின்றன. தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், 50 வினியோகஸ்தர்கள் இந்நிறுவனத்தினருடன் இணைந்திருக்கின்றனர்; பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளிலிருந்து பில்லிங் டேட்டாவை அணுக அனுமதிக்கப் பட்டிருக்கிறது. கடன் தகுதி மதிப்பீடு மருந்து வினியோகஸ்தர்கள் புதிய கடன் வழங்குவதற்கு முன்பு சில்லறை விற்பனையாளரின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு மெட்ஸ்கோர் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை பயன்படுத்துகின்றனர். ஒரு சில்லறை விற்பனையாளர் ஒரு பகுதியில் மற்றவர்களுடன் பணம் செலுத்துவதை தாமதப்படுத்தினால், வினியோகஸ்தர் இடைநிறுத்தம் செய்யலாம்; கடன் வரம்பை குறைக்கலாம் அல்லது முன்கூட்டியே பணம் செலுத்த கேட்கலாம். இதனால் வசூல் மேம்படும். ஒரு வினியோகஸ்தர் ஒரு சில்லறை விற்பனையாளரை 'தவறானவர்' என்று குறித்தால், 'மெட்ஸ்கோர்' நெட்வொர்க்கில் உள்ள வினியோகஸ்தர்களுக்கு நிகழ்நேர எச்சரிக்கையை அனுப்புகிறது. தற்போது இந்நிறுவனம் தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முழுவதும் 1.57 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களுக்கான கடன் சுயவிவரங்களை உருவாக்க டேட்டாவை ஒருங்கிணைக்கிறது. 10 மாநிலங்களில் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை பயனர்களை இணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. இணையதளம் www.medscore.in. சந்தேகங்களுக்கு Sethuraman.gmail.comஅலைபேசி: 98204 51259 இணையதளம்: www.startupandbusinessnews.com - சேதுராமன் சாத்தப்பன் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி