உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சஸ்பெண்ட் ஏ.டி.ஜி.பி., - எம்.எல்.ஏ., மீது சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு

சஸ்பெண்ட் ஏ.டி.ஜி.பி., - எம்.எல்.ஏ., மீது சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: காதல் ஜோடியை பிரிக்கும் விவகாரத்தில், 17 வயது சிறுவன் கடத்தப்பட்டது தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலாங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தனுஷ், 23. இவர், தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயஸ்ரீ, 21, என்பவரை காதலித்தார். இருவரும் சென்னையில், ஏப்., 15ல் பதிவு திருமணம் செய்தனர். இவர்களை பிரிக்க, பெண்ணின் தந்தை வனராஜ், பணி நீக்கம் செய்யப்பட்ட, முன்னாள் காவலர் மகேஸ்வரி ஆகியோர் முயற்சி செய்தனர்.ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி உதவியை நாடினார். அவர்களின் ஆலோசனையின்படி, மகேஸ்வரி, சென்னை பூந்தமல்லி அடுத்த துத்தம்பாக்கத்தை சேர்ந்தவரும், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியுமான சரத்குமார், வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன் ஆகியோர், தனுஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த, அவரது தம்பியான, 17 வயது சிறுவனை காரில் கடத்தி உள்ளனர்.திருவாலாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வனராஜ், மகேஸ்வரி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஜெயராம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.உச்ச நீதிமன்ற ஆலோசனையின்படி, வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில், மகேஸ்வரி மற்றும் சரத்குமார் அளித்த வாக்குமூலத்தில், 'சிறுவன் கடத்தல் விவகாரத்தில் ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோருக்கு தொடர்பு உள்ளது' என கூறியிருப்பதால், சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், ஜெயராம், ஜெகன்மூர்த்தி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இருவருக்கும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் 'சம்மன்' அனுப்பி, மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
ஜூன் 27, 2025 13:26

சட்டத்தை பாதுகாக்க காவலர்களை நியமித்தால் இவங்க இஷ்டத்துக்கு பணத்துக்காக நிறைய பேர் குற்றங்களை செஞ்சிகிட்டு இருக்காங்க. . நல்லவங்கள கெட்டவங்களா ஆக்கறதும், கெட்டவங்க கிட்ட பணத்தை புடுங்கற கொள்ளைகாரங்களா இருக்காங்க. . இது tax free கணக்காச்சே. .


GMM
ஜூன் 27, 2025 07:37

மகேஷ்வரி குற்றத்திற்கு உடந்தை. அவர் வாக்கு மூலம் செல்லுமா? பெற்றோர் சம்மதம் இல்லை. செல்வ பெண்ணை கடத்தி, மிரட்டி பதிவு திருமணம் செய்யவில்லை என்று உறுதி படுத்துவது யார்? ஜெயராமன் சஸ்பென்ட் புரியாத புதிர். அரசு கார் பராமரிக்க லாக் புக் இருக்கும்? இஷ்டம் போல் அரசு வாகனம் மாநிலம் முழுவதும் பயன்படுத்த படுகிறதா? ஜகன் மூர்த்திக்கு தென் மாவட்ட உறவு குறைவு. பெண் வீட்டார் எப்படி ஜகனை நாடி இருப்பர்? வழக்கு வழுக்கும்?


Kasimani Baskaran
ஜூன் 27, 2025 03:40

சார் தொடர்பு இருந்திருந்தால் கடத்தியது வெறும் 17 வயது பொம்மை என்று கூட வழக்குப்போட மறுத்து இருப்பார்கள்.