உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு விரைவில் ஒப்புதல்: மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு விரைவில் ஒப்புதல்: மத்திய அரசிற்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை துவக்கி வைக்கப்படும் எனக்கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணியின் கீழ், நடக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது:சென்னை மெட்ரோ ரயில் பணிகள், விரைந்து முன்னேற்றம் கண்டு வருகின்றன. முந்தைய ஆட்சியின் தாமதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டப் பணிகளை, இந்தியாவிலேயே முதலாவதாக மாநில அரசின் நிதியைக் கொண்டே தொடர்ந்து வந்தோம். அண்மையில், நமது கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கப்பட்ட மத்திய அரசின் பங்களிப்போடு இன்னும் விரைவாகச் செயல்படுத்தி வருகிறோம்.2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்தமல்லி-போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்படும். மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகள் முழுமையாக நிறைவுறும்போது, இந்தியாவிலேயே நகரப் பொதுப் போக்குவரத்து இணைப்பினில் சென்னை புதிய தர அளவுகோல்களை நிர்ணயிக்கும்!நடைபெற்று வரும் பணிகளை இன்று ஆய்வு செய்தபோது, நாம் தொடங்கிய திட்டம் இன்று செயலாக்கம் பெற்று, மேலும் விரிவடைந்து வருவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ஒப்புதலையும் விரைந்து மத்திய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

jayvee
பிப் 13, 2025 20:03

2026 தேர்தல் நிதிக்கு அவ்வளவு அவசரம் ..


அப்பாவி
பிப் 13, 2025 18:29

தேர்தல் வருகிறது ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் அவசரம்


Venkateswaran Rajaram
பிப் 13, 2025 17:12

முதலில் 2026 இல் உன் ஆட்டம் முடிந்துவிடும் ,பிறகு பார்த்துக்கொள்ளலாம்


சமீபத்திய செய்தி