உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி; முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதி; முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆலோசனை

சென்னை: சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக, தி.மு.க., மண்டலப் பொறுப்பாளர்களுடன், அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் நேற்று, ஆலோசனை மேற்கொண்டார்.2026 சட்டசபை தேர்தலில் வென்று, ஆட்சியை தக்க வைக்க, அனைத்து முயற்சிகளையும் தி.மு.க., மேற்கொண்டு வருகிறது.சட்டசபை தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர், மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்டச்செயலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், தமிழகம் முழுதையும் எட்டு மண்டலங்களாக பிரித்து, அமைச்சர்கள் நேரு, வேலு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. துணை பொதுச்செயலர்கள் கனிமொழி, ஆ.ராஜா ஆகியோர் மண்டல பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், மண்டல பொறுப்பாளர்களுடன், முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.எந்தெந்த தொகுதிகள் தி.மு.க.,வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக உள்ளன; கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை கொடுக்கலாம்; இப்போதுள்ள தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் பற்றி கட்சியினர், பொதுமக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது குறித்து, பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை