உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு

சென்னையில் விதி மீறி கட்டிய 10 மாடி கட்டடம்; இடித்து அகற்ற சி.எம்.டி.ஏ., முடிவு

சென்னை: சென்னை தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள, 10 மாடி வணிக வளாகத்தை இடிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. அந்த கட்டடத்தில் இருப்பவர்களை வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் பல்வேறு பகுதிகளில் விதிமுறை மீறி கட்டப்படும் கட்டடங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. சென்னை தி நகர், பாண்டிபஜார் சர் தியாகராய சாலையில், ஜனபிரியா பில்டர்ஸ் நிறுவனம் சார்பில், 10 மாடி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் 4வது மாடியில் இருந்து, 10வது மாடி வரை விதி மீறி கட்டப்பட்ட பகுதிகளை 'சீல்' வைக்க சி.எம்.டி.ஏ., நோட்டீஸ் அனுப்பியது.இதற்கு உரிய பதில் எதுவும் கிடைக்காத நிலையில் விதி மீறி கட்டப்பட்ட பகுதிகளை, 2019ல் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சீல் வைத்தனர். இதை எதிர்த்து கட்டட உரிமையாளர், கடந்த ஆண்டு உயர் நீதி மன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த குறிப்பிட்ட கட்டடத்தில், 4வது மாடியில் இருந்து, 10வது மாடி வரை விதி மீறி கட்டப்பட்ட பகுதிகள், பக்கவாட்டில் விதி மீறி கட்டப்பட்ட கடைகள் ஆகியவற்றை இடிக்க உயர் நீதிமன்றம் சி.எம்.டி.ஏ.,வுக்கு பிப்., 10ல் உத்தரவிட்டது.உயர் நீதிமன்ற உத்தரவுபடி விதிமீறி கட்டப்பட்ட பாகங்களை இடிக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்டடத்தை இடிப்பது தொடர்பான நோட்டீஸ் அந்த கட்டட உரிமையாளர்கள், அதில் கடைகள் வைத்திருப்போருக்கு அனுப்பப்பட்டது. கட்டட உரிமையாளர்கள் நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்ட நிலையில், அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கட்டடத்தை காலி செய்யும் அறிவிப்பையும் சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது. கட்டடத்தை, உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்கள், 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும்.இவர்கள் காலி செய்த பின் விதிமீறி கட்டிய கட்டடங்களை இடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Alexander S
மார் 21, 2025 09:24

விதிமுறைகளை மீறி 10 மாடிகள் வரை இந்த கட்டிடம் கட்டப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ? கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை.


Somu
மார் 21, 2025 21:55

தங்கள் கறுத்துக்கு நான் உடன் படுகின்றேன்


ananya natarajan
மார் 21, 2025 03:37

Good initiative , but same thing should should be done in George Town and Park Town areas


Subramani S
மார் 20, 2025 16:52

கோவை கஞ்சா ஜக்கி ஆக்கிரமிப்பு அகற்ற ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.. மேலிடம் பாதுகாப்பு தருகிறதோ?


c.mohanraj raj
மார் 20, 2025 15:24

அபராதம் போடலாம் இடித்து யாருக்கும் இல்லாமல் வெட்டியாக தானே போகிறது


Sivagiri
மார் 20, 2025 14:11

சென்னையே , விதிகளை மீறி முழுக்க முழுக்க - தெலுங்கு மயமாகிவிட்டது - கட்டிடங்கள் அனைத்துமே தெலுங்கர்களுக்கு சொந்தமாக்கி விட்டன , அங்கே வேலை செய்பவர்கள் அனைவருமே , வடக்கன்ஸ் அல்லது தெலுங்கன்ஸ் - , ,,,, ஒன்றிரண்டு தமிழர்களுக்கு இருந்தால் , இடித்து தள்ளப்படும் ,


Muralidharan S
மார் 20, 2025 12:48

சென்னை முழுவதுமே விதி மீறல் கட்டிடங்கள் மிகவும் அதிகம். விதிகளை மீறி கட்டிடம் கட்டிக்கொண்டு இருக்கும்போதே இதை தடுக்கலாம்.. நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்து இருந்தால்.. இதனால், எல்லோருக்கும் செலவும் நேரமும் உழைப்பும் மிச்சம் ஆகியிருக்கும்.. ஆனால், கடந்த 60 வருடங்களாக நடப்பதோ , எங்கும், எதிலும், எப்பொழுதும் லஞ்சம் என்ற நிலைமை. இப்படி எப்போவாவது, யாரவது நூற்றில் ஒருத்தன் மட்டும் அகப்பட்டு சொத்தை இழக்கிறான்.. மீதி 99 பேர் எஸ்கேப்.. மாட்டிக்காதவரை அனைவரும் யோக்கியர்கள்...


Ramaswamy Jayaraman
மார் 20, 2025 12:02

கட்டிய பிறகுஇடிக்கிறார்கள் என்றால், இவர் மற்றக்கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம். அல்லது எங்கோ தவறு நடந்திருக்கலாம்.


Natarajan Ramanathan
மார் 20, 2025 11:50

நோட்டீஸ் அனுப்புதல், ஒட்டுதல், சீல் வைத்தல், இடிக்க உத்தரவு போடுவது , தடை ஆணை பிறப்பிப்பது. போன்ற கற்கால நடவடிக்கை தவிர சமச்சீர் கல்வி அநீதிபதிகளுக்கு வேறு ஒன்றுமே தெரியாதோ?


ஆரூர் ரங்
மார் 20, 2025 11:47

ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதே பகுதியில் உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெருக்களிலுள்ள சுமார் 100 விதிமீறல் வணிகக்கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படவில்லை. அங்கு மூன்று பெரிய தீவிபத்துக்கள் நிகழ்ந்தன. ஆனாலும் உரிமையாளர்கள் அரசியல் செல்வாக்குள்ள ஆட்களும், சிறுபான்மை இனத்தாரும் என்பதால் அவற்றின் மீது நடவடிக்கை இல்லை. எதாவது அசம்பாவிதம் நடந்தால் தீயணைப்பு வண்டிகள் ஆம்புலன்ஸ் செல்லக் கூட போதுமான வழியில்லை.


Oru Indiyan
மார் 20, 2025 09:41

இது அண்ணா திருடர் கட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விதிமீறல். அப்போது சி எம் டி ஏ மந்திரி சத்திய சோதனை செய்த புண்ணியவான். அதை தொடர்ந்தது ஒரிஜினல் திருடர் கட்சி. இரண்டு திருடர் கட்சி தலைகள் மற்றும் சி எம் டி ஏ திருட்டு கும்பல்.. கூண்டோடு அந்தமான் சிறைக்கு அனுப்பினால் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை