மேலும் செய்திகள்
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்
32 minutes ago
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
45 minutes ago
சென்னை : 'நெல் கொள்முதல் ஈரப்பத அளவை, 22 சதவீதமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதை கருத்தில் வைத்து, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை, 17 சதவீதத்தில் இருந்து, 22 சதவீதமாக நிர்ணயிக்க, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, மத்திய குழுக்கள் கடந்த மாதம், 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை, தமிழகத்தில் களஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் இருந்து நெல் மாதிரிகளை சேகரித்தது. ஆனால், தளர்வு தொடர்பான உத்தரவுகள் இன்றளவும் கிடைக்கவில்லை. எனவே, ஈரப்பத அளவு தளர்வு உத்தரவை, விரைவாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
32 minutes ago
45 minutes ago