உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோந்து விமானங்களை அதிகரிக்க நடவடிக்கை கடலோர காவல்படை தலைமை இயக்குநர் தகவல்

ரோந்து விமானங்களை அதிகரிக்க நடவடிக்கை கடலோர காவல்படை தலைமை இயக்குநர் தகவல்

சென்னை: ''இந்திய கடலோர காவல்படையில், கப்பல்கள் மற்றும் ரோந்து விமானங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி தெரிவித்தார். இந்திய கடலோர காவல்படை சார்பில், தேசிய அளவில் எண்ணெய் கசிவு பேரிடர் எதிர்வினை பயிற்சி ஒத்திகை நேற்று சென்னையில் நடந்தது. இதில், கடலோர காவல் படையின் சவுரியா, சமுத்திரா பிரஹாரி மற் றும் சமுத்திரா பாவ கப்பல்கள் இடம் பெற்றன. பயிற்சியின் போது, கப்பல்களில் இருந்து கடலில் கசியும் எண்ணெய் மற்றும் கசடுகளை, விரைவாக எப்படி அகற்றுவது என செய்து காண்பிக்கப்பட்டது. கப்பலில் ஏற்படும் தீ விபத்தை கட்டுப்படுத்துவது; விபத்துக்குள்ளான கப்பல்களில் இருந்து பயணியரை மீட்பது போன்ற ஒத்திகை நடந்தது. இதில், 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இது குறித்து, இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி கூறியதாவது: மத்திய அரசு, கடலோர காவல்படையின் முக்கியத்துவத்தை கருதி, தொழில்நுட்பம் மற்றும் தளவாடங்களுக்காக, பட்ஜெட்டில் 25 சதவீதத்தை கூடுதலாக உயர்த்தி உள்ளது. எண்ணெய் மாசை அகற்ற, கோவா கப்பல் கட்டும் தளத்தில், இரு அதிநவீன மாசு கட்டுப்பாட்டு கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒரு கப்பல் நடப்பாண்டு கடலோர காவல் படையில் இணையும். இந்திய கடலோர காவல்படையில், தற்போது 60 கப்பல்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை 183 ஆகவும், 78 ரோந்து விமானங்கள் என்பது, 200 ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை