உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்

கோவை: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.கடந்த நவ.2ம் தேதி, கோவை விமான நிலையம் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை கடத்திய 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கருப்பசாமி (எ)சதீஷ், கார்த்திக் (எ) காளிஸ்வரன், தவசி (எ) குணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தேடுதல் வேட்டையின் போது இவர்கள் 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் கால்பகுதியில் சுட்டு பிடித்தனர். கோவை மத்திய சிறையில் உள்ள அவர்கள் 3 பேர் மீது 50 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இவர்கள் 3 பேர் மீதும், திருப்பூர், கோவையின் பல்வேறு பகுதிகளில் கொலை முயற்சி, திருட்டு,வழிப்பறி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந் நிலையில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், அவர்கள் 3 பேர் மீதும் தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பிறப்பித்து உள்ளார். இந்த அதிகாரப்பூர்வ உத்தரவானது, கோவை மத்திய சிறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி