உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை பெண்ணுக்கு நெதர்லாந்து மாப்பிள்ளை; பாரம்பரிய முறைப்படி திருமணம்!

கோவை பெண்ணுக்கு நெதர்லாந்து மாப்பிள்ளை; பாரம்பரிய முறைப்படி திருமணம்!

கோவை: கோவையை சேர்ந்த பெண், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞரை காதலித்து கரம் பிடித்தார். இந்த திருமணம் இன்று கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் நடந்தது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்தினர். கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரமேலதா, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பவருடன் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது.இதன் தொடர்ச்சியாக, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, இருவீட்டார் சம்மதத்துடன் பிரேமலதாவுக்கும், நெதர்லாந்து இளைஞர் ரமோன் ஸ்டீன்ஹீஸ்க்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் தமிழர் பாரம்பரிய முறைப்படி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. நெதர்லாந்திலிருந்து மணமகன் பெற்றோர், உறவினர்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mummoorthy Ayyanasamy
ஜன 21, 2025 07:27

இது சாதனை திருமணம். இளைஞர்கள் நெருங்கிய உறவு திருமணத்தை தவிர்த்து இப்படித் தான் அந்நிய இனங்களில் திருமணம் செய்யனும்.நல்வாழ்த்துக்கள்.


முக்கிய வீடியோ