மேலும் செய்திகள்
தி.மு.க., விடம் இம்முறை 39 தொகுதிகள்! கேட்கிறது காங்.,:
1 hour(s) ago
அமித்ஷாவை சந்தித்தேன்: ஓபிஎஸ் பேட்டி
4 hour(s) ago | 1
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..?: இபிஎஸ் கேள்வி
5 hour(s) ago | 4
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டியில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அனுமதித்த நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், அவமதிப்பு வழக்கில் கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். அம்பாத்துறை அருகே பெருமாள்கோவில்பட்டி சித்தன் பால்ராஜ் என்பவர், ஏற்கனவே தாக்கல் செய்த மனு: பெருமாள்கோவில்பட்டியிலுள்ள மண்டு கருப்பணசாமி கோவிலை மீண்டும் திறக்க வேண்டும். தி னசரி பூஜைகளை நடத்த மக்களை அனுமதிக்க வேண்டும். டிச., 2 முதல் 4 வரை காளியம் மன் கோவில், கருப்பணசாமி கோவில் முன் கார்த்திகை தீபத் விழா நடத்த அனுமதி வழங்க, ஆத்துார் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். கடந்த டிச., 2ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட சர்வே எண்களிலுள்ள நிலம் தொடர்பாக யாரும் உரிமை கோருவதை தடைசெய்யும் வகையில் தற்போதைய நிலை தொடர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவில் குறிப்பிட்டுள்ள இடம், ஒரு சர்வே எண்ணில் அமைந்துள்ளது. ஹிந்து, கிறிஸ்தவர்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக போலீசார் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என தாசில்தார் தெரிவித்தார். சின்னாளபட்டி போலீசில் 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கிராமத்தில் பெரும்பான்மை சமூகமான கிறிஸ்தவர்களுக்கு குறிப்பிட்ட சர்வே எண்ணிற்கு உட்பட்ட நிலத்தில் எந்த உரிமையும் இல்லை. அங்கு கார்த்திகை தீபம் ஏற்றும்போது கிறிஸ்தவர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மனுவில் குறிப்பிட்டுள்ள இடங்களில் கார்த்திகை தீபத்திருவிழா நடத்த அனுமதிக்கப்படுகிறது. பக்தர்களின் உரிமை நிலைநாட்டப்படுவதை போலீசார் உறு தி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். இதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் நேற்று காலை, 10:30 மணிக்கு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. நீதிபதிகள், 'சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை' எனக்கூறி, நீதிபதிகள் நிராகரித்தனர். சித்தன் பால்ராஜ்,'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ.,திருமலை, ஆத்துார் தாசில்தார் முத்துமுருகன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். இதை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கலெக்டர், எஸ்.பி., மதியம் 3:15 மணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி, கலெக்டர் சரவணன், எஸ்.பி.,பிரதீப் ஆஜராகினர். நீதிபதி: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியுமா, இல்லையா. கிராமத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை திரும்பப் பெற வேண்டும். கலெக்டர்: சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். கள நிலவரம் சரியில்லாததால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர்கள்: மதநல்லிணக்கம், அ மைதி முக்கியம். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. போதிய அவகாசம் அளிக்க வேண்டும். மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர கதியில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனில் சி.ஆர்.பி.எப்., போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்ற மறுக்கிறது. ஆட்சி செய்ய மாநில அரசுக்கு தகுதி இல்லை. தமிழக அரசை கலைத்து விட்டு, கவர்னர் ஆட்சிக்கு பரிந்துரைக்க வேண்டும். இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 'இவ்விவகாரத்தில் நீதிபதி அழுத்தம் தருவது ஏற்புடையதல்ல' என்றனர். நீதிபதி: நான் அழுத்தம் தரவில்லை. பதிலை எதிர்பார்க்கிறேன். கலெக்டர்: பிரச்னை எழுந்ததால், நிலைமையை கட்டுக்குள் வைக்க தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிபதி: அவ்வாறெனில் தடையுத்தரவை திரும்பப் பெற இயலாது. அப்படித்தானே... அரசு தரப்பு பதிலளிக்க முயன்றது. நீதிபதி: குரலை அதிகரித்து பேச வேண்டாம். அரசு வழக்கறிஞர்: அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் ஆஜராகும்போது, அவர்கள் சார்பாக வாதிட எங்களுக்கு உரிமை உண்டு. எங்கள் கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். நீதிபதி: அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி: மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தடை உத்தரவை திரும்பப் பெற இயலாது என கலெக்டர் தெரிவித்துள்ளார் என்பதை பதிவு செய் நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். மாலை 6:05 மணிக்கு விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: விசார ணை இன்று ஒத்திவைக்கப் படுகிறது. கலெக்டர், எஸ்.பி.,ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.
1 hour(s) ago
4 hour(s) ago | 1
5 hour(s) ago | 4