சென்னை: 'யுமிஸ்' தளத்தில், பி.எட்., மாணவர்களின் விபரங்களை, கல்லுாரிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து, அந்த பல்கலையின் பதிவாளர் ராஜசேகரன், அனைத்து கல்வியல் கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்ற, அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், 2025 - 26ம் கல்வியாண்டில், பி.எட்., -- எம்.எட்., சேர்ந்த மாணவ, மாணவியரின் விபரங்களை, வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதில், காலதாமதம் அல்லது தவறு ஏற்பட்டால், பல்கலை பொறுப் பேற்காது. மேலும், 424 கல்வியியல் கல்லுாரிகள், 2022 - 23, 2023 - 24ம் கல்வியாண்டுகளில், பி.எட்., - எம்.எட்., படித்து முடித்த, 21,506 மாணவ, மாணவியரின் விபரங்களை, இதுவரை புதுப்பிக்க வில்லை. மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தோல்வியடைந்திருந்தாலும், கவலை வேண்டாம். அவர்களின் விபரங்களை, கல்வி நிறுவனங்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.