உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 நீதிபதிகள் மாற்றம் கொலீஜியம் பரிந்துரை

3 நீதிபதிகள் மாற்றம் கொலீஜியம் பரிந்துரை

உச்ச நீதிமன்றம் மற்றும் நாடு முழுதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை, உச்ச நீதிமன்ற கொலீஜியம் வழங்கி வருகிறது. இதற்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை வகிக்கிறார். இந்நிலையில், கொலீஜியம் அளித்துள்ள பரிந்துரைகளின் படி, தற்போது பாட்னா உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ள பி.பி.பஜன்திரியை, பாட்னா உயர் நீதிமன்ற நிரந்தர தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், கொல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள சவுமீன் சென், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான எம்.சுந்தரை மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் பரிந்துரை வழங்கப் பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை