உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக சிலிண்டர் விலை ரூ.70 குறைப்பு

வணிக சிலிண்டர் விலை ரூ.70 குறைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 70.50 ரூபாய் குறைந்துள்ளது. வீட்டு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லைஇந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும்; வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும், சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதத்தின் முதல் நாளன்று உள்நாட்டில், சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 818.50 ரூபாய்க்கு விற்பனையானது. இம்மாதம், அதன் விலையில் மாற்றம் செய்யப்படாமல், அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இம்மாதம், வணிக சிலிண்டர் விலை, 70.50 குறைந்து, 1,911 ரூபாயில் இருந்து, 1,840.50 ரூபாயாக சரிவடைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ரூ.1,840.50க்கு விற்பனை ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Duruvesan
ஜூன் 01, 2024 08:36

ஆக ஒடிசா மஹா எலெக்ஷன் காக மோடி இப்போதே நாடகம் ஆரம்பித்து விட்டார்


hari
ஜூன் 01, 2024 10:39

ஓகே நீங்க சிலிண்டர் வாங்காதேங்க.....


N Sasikumar Yadhav
ஜூன் 01, 2024 11:10

நாடக கோஷ்டிகளான உங்களுக்கு எல்லாமே நாடகமாக தெரியும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி