உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக சிலிண்டர் விலை உயர்வு; ஒரு சிலிண்டர் ரூ.1,965

வணிக சிலிண்டர் விலை உயர்வு; ஒரு சிலிண்டர் ரூ.1,965

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து, ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது.பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 01) வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து, ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மாதம் ரூ.7 விலை குறைந்த நிலையில், தற்போது ரூ.5.50 உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Venkatesan Srinivasan
மார் 01, 2025 11:02

மிகவும் உண்மை. ரூபாய் 1960 கொடுத்து வாங்குபவர்கள் மீது அநியாயமாக ரூபாய் 5.50 ஏற்றியது கொள்ளை. எண்ணெய் நிறுவனங்களை கான் கிராஸ் - ப. சிதம்பரம் போல கடன் வாங்க நிர்ப்பந்தம் செய்து ஆயில் பாண்ட் விலை குறைப்பு செய்ய வைக்க, கண்டிப்பாக மத்திய பாஜக அரசால் முடியாது. இருக்கும் கடன்களை அடைக்க வைத்து நல்ல நிலைக்கு அந்த நிறுவனங்களை பாதுகாக்க மட்டுமே முடியும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே. வாழ்க வளர்க பாரதம் இந்திய தேசிய தமிழ் தமிழகம்.


raja
மார் 01, 2025 08:19

கவலை படாதே தமிழா ... தமிழர்கள் முகத்தில் விடியலை கொடுத்து? மலர்ச்சியை மட்டுமே கானு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நான்கு ஆண்டுகளுக்கு முன் கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி சிலிண்டருக்கு நூறு ரூபாய் குறைத்து இல்லத்தரசிகளின் முகத்தில் புன்முறுவல் காண்பார் ? நம்பு....


Kasimani Baskaran
மார் 01, 2025 07:33

சதவிகிதத்தில் சொன்னால் பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். ~0.2%


பாமரன்
மார் 01, 2025 21:25

கரீக்டு காசி... மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை பத்து சதவீதம் வீழ்த்தும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கலை... அல்லாத்துக்கும் காரணம் காங் காலத்தில் துவக்கப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் தான்... மேலும் நேரு அவுரங்கசீப் டீம்கா கூட தான் காரணம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை