உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியாரிடம் மின்சாரம் வாங்க ஆணையம் அனுமதி

தனியாரிடம் மின்சாரம் வாங்க ஆணையம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தனியார் நிறுவனங் களிடம் இருந்து மின்சாரம் வாங்க, வரும் 2026 பிப்ரவரி முதல் மே மாதம் 15ம் தேதி வரை, மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. வரும் 2026 கோடை காலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த சமயத்தில், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்ய, பிப்., 1 முதல் மே 15ம் தேதி வரை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்க, ஆணையத்திடம் மின் வாரியம் அனுமதி கேட்டது. இம்மனுவை விசாரித்த ஆணையம், மின்சாரம் வாங்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி, 2026 பிப்ரவரியில் தினமும் 24 மணி நேரம், 450 மெகா வாட்; மாலை 6:00 முதல் இரவு 12:00 மணி வரை உச்ச நேரத்தில், 720 மெகா வாட்; மார்ச்சில் தினமும் 24 மணி நேரம், 950 மெகா வாட்; மாலை முதல் இரவு வரை உச்ச நேரத்தில், 1,520 மெகா வாட். ஏப்ரல் முழுதும் தினமும், 1,500 மெகா வாட், மாலை உச்ச நேரத்தில், 2,400 மெகா வாட்; மே மாதத்தில், 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினமும், 1,500 மெகா வாட், உச்ச நேரத்தில், 2,400 மெகா வாட் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Yasararafath
ஆக 31, 2025 20:39

தனியாரிடம் மின்சாரம் வாரியம் ஒப்படைப்பது நல்லதா.


Vasan
ஆக 31, 2025 08:30

This is a good proposal and thanks to Regulatory Commission for approving this. This power purchase will be helpful to tide over the power shortage during summer months, which will peak during election year 2026, as Electricity board will aim to supply uninterrupted power to all consumers such as agriculture, domestic, schools & colleges, industries, and commercial establishments. We need to be ahead of other states for power purchase in time, and TNEB has done that now.


Thravisham
ஆக 31, 2025 08:09

கமிஷன் அடிங்க, மின்சார விலைய கூட்டுங்க , தொழிற்சாலைகளை அடிச்சு ஓட்டுங்க


D Natarajan
ஆக 31, 2025 06:18

கொள்ளையோ கொள்ளை. விடியல் கணக்கில் ஏற்றம் ஆரம்பமாகி விட்டது.


Palanisamy Sekar
ஆக 31, 2025 05:12

தேர்தல் செலவுக்கு வழிவகை செய்தாயிற்று. திராவிட மாடல் அரசின் செயல்கள் அனைத்துமே அடுத்த ஆட்சியில் விசாரணைக்கு உட்பட்டே ஆகும்போல. செய்யுங்கள் செய்யுங்கள் உங்களது இறுதி ஆசைவரை செய்துகொண்டே செல்லுங்கள் இனி ஆட்சி அம்போதானே.


Kasimani Baskaran
ஆக 31, 2025 05:09

கமிஷன் கிடைக்க ஏதுவாக மின்சாரம் வாங்கும் ஏற்ப்பாடு சிறப்பானது..


Mani . V
ஆக 31, 2025 04:00

இனி அரசியல்வாதிகளின் பங்களாக்களில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். எப்படியோ அப்பா குடும்பம் தமிழ்நாட்டை நிர்மூலம் ஆக்காமல் ஓயாது.