உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனைகளில் பாதுகாப்பு உறுதி செய்ய ஆணையம் உத்தரவு

மருத்துவமனைகளில் பாதுகாப்பு உறுதி செய்ய ஆணையம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லுாரி வளாகங்களில், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில், அரசு மருத்துவ கல்லுாரியில், பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு, நாடு முழுதும் டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணைய செயலர் ஸ்ரீனிவாஸ், மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மருத்துவ கல்லுாரிகளில், டாக்டர்கள் மீதான வன்முறைகளும், வன்கொடுமைகளும் தொடர்கின்றன. டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என, அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான செயல் திட்டங்களை, மருத்துவ கல்லுாரி நிர்வாகங்கள் வகுக்க வேண்டும்.புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவ துறைகள், விடுதி, கல்லுாரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் செயல் திட்டங்கள் இருக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்தல் அவசியம்.போதிய எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில், ஆண், பெண் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். மாலை வேளைகளில், மருத்துவ கல்லுாரி வளாகங்களில், பாதுகாப்பாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர வழி வகை செய்வது அவசியம்.மருத்துவ கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், ஊழியர்களுக்கு எதிரான வன்கொடுமை நிகழ்வுகளை, சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுப்பது கட்டாயம். அதுதொடர்பாக போலீசில் புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். மருத்துவ பணியிட பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

பிரேம்ஜி
ஆக 15, 2024 11:49

மருத்துவ மனைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு. மற்ற இடங்களில் மக்களுக்கு பாதுகாப்பு தேவையில்லை. அப்படித்தானே! நல்ல நிர்வாகம்!


gmm
ஆக 15, 2024 10:14

மாநில போலீசார் பணி அரசு பள்ளி மருத்துவமனை, அலுவலகம், அரசு சொத்தை பாதுகாக்க மட்டும் தான். திராவிட மாடல் போலீசை கொண்டு, கவர்னர் நீங்கலாக அனைத்தையும் போலீசார் உதவியுடன் தன் முழு கட்டுப்பாட்டில் வைத்து விட்டது. மாநில ஆளும் கட்சி பின் முழுநேரம் சுற்றுவது / வாகனங்களை மடக்கி பிடித்து அபராதம் விதிப்பது தான் பணி என்று எண்ணிவிட்டனர். மெட்ராஸ் HC ல் மத்திய படையின் காவலுக்கு பின் அசம்பாவிதம் இல்லை. மாகாண, தேசிய காவல் நிலையம் அமைத்து, மாநில கூட்டு நிர்வாகம், மத்திய அரசு கீழ் நிர்வாகம் இருந்தால் தான் மாநிலத்தில் இது போன்ற குற்றம் குறையும். மத்திய அரசின் ஏற்பாட்டை அரசியல் சாசன உச்ச நீதிமன்ற சபை ஒத்து கொள்ள வேண்டும். மாட்டார்கள். வழக்கறிஞர்களுக்கு அதிக வழக்கு தேவை?


Barakat Ali
ஆக 15, 2024 09:08

கண்கெட்ட பிறகு ...........


RK
ஆக 15, 2024 07:40

எல்லா அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு 24/7 தினந்தோறும் கொடுக்க வேண்டும்.


R.RAMACHANDRAN
ஆக 15, 2024 07:02

மருத்துவ மனைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதன் மீதும் நடவடிக்கைகள் எடுத்தால்தான் அவர்கள் மீதான தாக்குதலுக்கு முடிவு காண முடியும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ