உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கமிஷனர் அருண் மன்னிப்பு கேட்டார்

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கமிஷனர் அருண் மன்னிப்பு கேட்டார்

சென்னை:'ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில், 'ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தார். அதற்கு ஏற்ப, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், 'என்கவுன்டர்' செய்யப்பட்டார். அதன் பின், ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோரும் 'என்கவுன்டர்' நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.உதவி கமிஷனர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் உறவினர்களை சந்தித்து, எச்சரிக்கை செய்தனர்.சென்னை திருவொற்றியூரில் உள்ள, ரவுடி ஒருவரின் வீட்டிற்குச் சென்ற உதவி கமிஷனர் இளங்கோவன், அவரது மனைவியிடம், 'உங்கள் கணவர் கத்தியை எடுத்து ஏதேனும் கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான். கை கால்கள் உடைக்கப்படும்' என, எச்சரித்தார்.இச்சம்பவங்கள் குறித்து, மாநில மனித உரிமை கமிஷன் தானாக முன்வந்து, உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் அவருடன் சென்ற போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது. அக்., 14ல் ஆஜராக வேண்டும் என, கமிஷனர் அருணுக்கு, 'சம்மன்' அனுப்பியது.அதையடுத்து, நீதிபதி மணிக்குமார் முன், அருண் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜரானார். நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அருண் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, கமிஷனரின் பேச்சுக்கு மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sugumar
அக் 18, 2024 16:53

அவர் மன்னிப்பு கேட்க்கவில்லை.


shakti
அக் 18, 2024 16:26

தீவிரவாதிகளுக்கு மனித உரிமை, அனால் அவர்களால் கொள்ளப்படும் சாதாரண மனிதர்களுக்கு மனித உரிமை இல்லையென்றால் அந்த மனித உரிமையாவது கருணாநிதியாவது ..


Ms Mahadevan Mahadevan
அக் 18, 2024 16:06

அப்பாவி எளி ய சாமானிய மனிதர்கள் பாதிக்கப்படும் போது ஆணியம் தாமாக முன்வந்து வழக்கு பதிய வில்லையே? உதாரணம் அடுக்கு மாடி கார் பார்க்கிங். சாமானியர்கள், கட்சிக்காரர்கள் காவல்துறை பந்தாபட்டு களால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.


Karunakaran
அக் 18, 2024 15:10

கமிஷனர் கூறியது சரியே, ரவுடிகளும் அவர்கள் சார்ந்தவர்களும் ஒழிக்கப்பட/அழிக்கப்பட வேண்டியவர்களே?


ilyasmuhammad
அக் 18, 2024 14:34

Justice delayed justice denied justice hurried justice burried


Ramaswamy
அக் 18, 2024 12:26

கமிஷனர் பேச்சில் தவறு இல்லை. முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். கொஞ்சியோ, கெஞ்சியோ எடுக்க முடியாது. மனித உரிமை கழகம் வேண்டியது தான், ஆனா போலிசுக்கு மட்டுமே தெரியும் என்ன மருந்தை கொடுத்தா பயங்கர வாதி குணமாவான் என்று ??????


SARAVANAN A
அக் 18, 2024 07:41

நஞ்சு கக்கும் நாகங்களிடம் யாரவது கெஞ்சிக் கொண்டிருப்பார்களா? சாமானிய மக்களை காக்கவே சட்டங்களும், நீதியும் எளிய மற்றும் சாதாரண மக்களிடம் அத்துமீறுபவர்களிடமும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்க முடியாது சிலருக்கு தடியடி நடத்தினால் தான் புரியும்: சிலருக்கு புல்டோசர் தான் புரியும். என்ன செய்ய மனிதர்கள் பலவிதம். உபதேசங்கள் அத்தகையவர்களுக்கு புரிவதில்லை.


முக்கிய வீடியோ