உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் அறிக்கை தயாரிக்க நிறுவனம் தேர்வு

செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் அறிக்கை தயாரிக்க நிறுவனம் தேர்வு

சென்னை:மத்திய அரசின் பங்களிப்போடு, 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, சென்னை - விழுப்புரம் 167 கி.மீ., சென்னை - வேலுார் 140 கி.மீ., கோவை - சேலம் 185 கி.மீ., வழித்தடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் டெண்டர் வெளியிட்டது. விண்ணப்பித்த 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இறுதியாக, 'பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ்' என்ற தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிறுவனம், நான்கு மாதங்களில் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி