உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் கடை மீது புகாரா? 30 நாளில் நடவடிக்கை

டாஸ்மாக் கடை மீது புகாரா? 30 நாளில் நடவடிக்கை

சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 மதுக்கடைகள் வாயிலாக, மதுபானங்களை விற்பனை செய்கிறது.இதில், 500க்கும் மேற்பட்ட கடைகள் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகள் தொடர்பாக, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க, மதுபானங்கள் சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அதில், 'வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் குறித்து, ஏதேனும் புகார் பெறப்பட்டால், அதன் மீது, உரிய முகாந்திரம் இருந்தால் அதன் அடிப்படையில் 30 நாட்களுக்குள், கலெக்டர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ