உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் ஜப்தி உத்தரவு ரத்து

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டின் ஜப்தி உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.இந்த கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் 'அன்னை இல்லம் எனது வீடு கிடையாது. தம்பி பிரபுவின் வீடு எனவே தடையை ரத்து செய்ய வேண்டும்' என்று மனு செய்தார். இதற்கிடையே, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்ய கோரி நடிகர் பிரபு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று (ஏப்ரல் 21) விசாரித்த உயர்நீதிமன்றம், ''நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்'' என்பதை உறுதி செய்தது. பின்னர் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 17:09

கடன் வாங்குன நாலு கோடியையும் கறுப்பாவே இருட்டுக்குள்ள செட்டில் பண்ணிட்டாங்க போல இருக்கு


rengarajan
ஏப் 21, 2025 16:36

அண்ணா தம்பி அட்ஜஸ்ட்மெண்ட்


Venkat
ஏப் 21, 2025 14:03

கூறியிருப்பார்கள்


Raghavan
ஏப் 21, 2025 13:39

கடன் கொடுத்தவர் எந்த அசையாத சொத்தை பெற்று கடன் கொடுத்தார். அதை பத்திர பதிவு அலுவகத்தில் ரெஜிஸ்டர் செய்து வில்லங்கத்தில் சரி பார்த்தாரா? பின் அந்த சொத்தைத்தானே ஜப்தி செய்ய கோர்ட்டை அணுகியிருக்கவேண்டும். வேறு ஒருவர் பெயரிலுள்ள சொத்துக்கு எப்படி நிதி நிறுவனம் கடன் கொடுத்தது. நீதி மன்றமும் இவைகளை முறையாக சரிபார்காமல் ஜப்திக்கு உத்தரவிட்டதா? நீதிமன்றங்களின் அவலங்களை பார்க்கும்போது பேசாமல் நீதிமன்றங்களை புறக்கணித்து நிதி நிறுவனத்துடன் சமரசம் செய்துகொள்ளலாம் ஒரு நல்ல வழக்கறிங்கரை வைத்து .


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஏப் 21, 2025 17:00

நீ...திபதியின் அவலங்களை என்று இருந்தால் இன்னும் மிகவும் சரி.


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
ஏப் 21, 2025 12:25

விளங்கிடும்.


Ramesh Sargam
ஏப் 21, 2025 12:25

ஜப்தி ரத்து ஓகே. கடன் கொடுத்தவரின் பணம் எப்பொழுது, யார் கொடுப்பார்கள், யார் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் அதைப்பற்றி ஒன்றும் கூறவில்லையே.


RAVINDRAN.G
ஏப் 21, 2025 12:23

அப்போ கடன் கொடுத்தவன் நிலைமை? அல்வாவா?


பாரதி
ஏப் 21, 2025 12:22

தவறான தீர்ப்புக்கு அனைத்து வகையிலும் ஆன செலவுகளை எல்லாம் கூட்டி அவர்களை அழைக்க சொல்ல வேண்டும்


Shekar
ஏப் 21, 2025 12:09

எது யாரோடதுன்னு தெரியாம தீர்ப்பு, விளங்கிடும்.


M R Radha
ஏப் 21, 2025 12:17

கொலிஜிய முறையில் வந்தவரா அல்லது கட்டு காசு மூலம் வந்தவரா? இவர் "அளித்த" பழைய நீதிகளை கிளறி பாருங்க


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 21, 2025 11:18

கடன் வாங்கியது என்ன ஆனது ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 21, 2025 12:10

கருப்பு கோட் கனவான்களுக்கு செட்டில்மென்ட் ஆயிருக்கும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை