மேலும் செய்திகள்
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
2 hour(s) ago | 2
48 மணி நேர உண்ணாவிரதம்: ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்
7 hour(s) ago | 1
சென்னை: தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் அமைத்துள்ள 5 பேர் கொண்ட குழு இன்று (டிச.,03) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தியது. ''இண்டி கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு மிகப்பெரிய உதாரணம்'' என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த 5 பேர் கொண்ட குழுவை, காங்கிஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் இன்று (டிச.,03) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சு நடத்தினர். பின்னர் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியதாவது: காங்கிரஸ் மேலிடம் ஒரு குழு அமைத்து இருந்தார்கள். இந்த குழு இன்று மரியாதை நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறது. அவர்கள் குழு அமைத்த பிறகு பேச்சுவார்த்தை தொடங்கும். கிழக்கா? மேற்கா? தெற்கா? வடக்கா என உங்களுக்கு சந்தேகம் இருந்தது. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இண்டி கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு மிகப்பெரிய உதாரணம். திமுக- காங்கிரஸ் 4,5 தேர்தலில் வெற்றி கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து பொறுந்திருந்து பாருங்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
2 hour(s) ago | 2
7 hour(s) ago | 1