உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உங்கள் இடம்: காங்., கட்சி தேய்பிறையாவது ஏன்?

இது உங்கள் இடம்: காங்., கட்சி தேய்பிறையாவது ஏன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்

அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ், தேசத்தையே ஆண்ட கட்சி; சாதனைகளை விட, நிறைய சோதனைகளை கண்ட கட்சி... வாரிசுகள் ஆதிக்கத்தால் வளராமல், வாடி வதங்கி வரும் கட்சி... காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம்; தொண்டர்கள் குறைவு. காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையான தலைவர்களாக நாடே அறிந்தவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா... இவர்களை துதி பாடி அரசியல் செய்யும் பல மாநில தலைவர்கள், அவர்கள் வாரிசுகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்... இந்த கட்சியில், தேசிய தலைவரையோ, மாநில தலைவரையோ கவுரவிக்க ஒரு பெரிய கூட்டத்தை கூட்ட தொண்டனுக்கு சம்பளம் தர வேண்டும். இல்லை என்றால், யாரும் வர மாட்டார்கள்.உதாரணம், பிரதமரின் ஜாதி பற்றி தரக்குறைவாக பேசிய வழக்கில், ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது எம்.பி., பதவி பறிப்பு என, தீர்ப்பு வந்த அன்று, தமிழக காங்கிரஸ்சார்பில் ரயில் மறியல் போராட்டம்நடத்த, அன்றைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சென்ற போது, அவருடன் போன அந்த நான்கு பேர் சாதனை அல்ல; வேதனை.தேசிய அளவில் காங்கிரசை காப்பாற்ற, அக்கட்சியின் வரலாற்றை விளக்க, ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தார்; பலன் பூஜ்யம்... பா.ஜ.,வை எதிர்க்க தேசம் முழுதும் உள்ள மாநில எதிர்க்கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கினர்.ஆனால், தொகுதி பங்கீட்டில் மாநில கட்சிகளுடன் கருத்து வேறுபாடு உருவாக்கி, அக்கூட்டணி உதிர்ந்து போகும் நிலையில் உள்ளது.இனியும், காங்கிரஸ் தொண்டர்களை நம்பி, களத்தில் இறங்கினால் தோல்வி தான் மிஞ்சும் என்பதை உணர்ந்து, சோனியா தேர்தல் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, ராஜ்யசபா எம்.பி.,யாக பார்லிெமன்ட்டுக்குள் செல்ல முடிவு எடுத்து விட்டார்.சோனியா குடும்பத்துக்கு இதுவரை விசுவாசம் காட்டிய கமல்நாத் போன்ற பல தலைவர்களும், இனி வற்றும் குளத்தில் வாழ முடியாது; வற்றாத குளத்தை தேடுவோம் என்று பா.ஜ., பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். எது எப்படியோ... காங்., கட்சி தேய்பிறையாகி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.Ramakrishnan
பிப் 23, 2024 18:58

அது முதியோர் கட்சி. அப்படித்தான் இருக்கும். பழையவர்கள் இறந்தால்.. புதுமுகங்கள் வரவேண்டும். அது தான் இல்லையே... பிறகு அந்த கட்சி தேய்பிறை தானே...


duruvasar
பிப் 23, 2024 15:50

விடுங்கள். தமிழ்நாட்டில் அந்த சரிவை சரி செய்யத்தான் ஸ்டாலினின் ஆணைபடி அண்ணன் செல்வ பேருதகையை மாநில கட்சி தலைவராகியிருக்கிறார்கள் . இப்படியே போக போக அந்தந்த மாநிலக்காட்சிகள் காங்கிரெஸ்ஸை "சரி" செய்து நிமிர்த்திவிடுவார்கள். கவலையே வேண்டாம்.


Rajarajan
பிப் 23, 2024 13:00

சுயநலத்துக்காக நாட்டை துண்டாக்கிய கட்சி காங்கிரஸ்.


venugopal s
பிப் 23, 2024 11:39

காங்கிரஸ் கட்சியின் பிரச்சினை குறித்து பாஜகவினர் ஏன் கவலைப்பட்டு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டும்? அவர்கள் பிரச்சினைகளை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!


Suppan
பிப் 23, 2024 12:26

நாட்டுக்கு நல்ல ஒரு எதிர்க்கட்சி தேவை. அநேகமான எல்லா மாநிலங்களிலுமுள்ள ஒரு கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். ஆகவே காங்கிரஸ்தான் எதிர்க்கட்சித்தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் அதன் செயல்பாடுகள் அதற்கு எதிராகவே உள்ளன. போதாக்குறைக்கு அந்த பாழாய்ப்போன இத்தாலிக் குடும்பத்தையும் ஒன்றுக்கும் உதவாத ராகுலையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி விடி மோட்சம் கிடைக்கும்? இந்த அழகில் சிறுபான்மையினர் நலன்மட்டுமே முக்கியம் என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மையினரை அலட்சியம் செய்யும் போக்கு . எப்படி விளங்கும்?


sahayadhas
பிப் 23, 2024 11:37

காங்கிரஸ் தேயவில்லை உருமாற்றம் தான் எல்லா காங்கிரஸ் திருடர்களும் BJP ல் சேர்ந்து வளர்ச்சியாக தான் உள்ளது.


பல்லவி
பிப் 23, 2024 11:32

அன்றைய கால கட்டத்தில் மன்மோகன் சிங் மற்றும் பிரணாப்முகர்ஜி ஆகிய இருவரது பதவிகளும் மாறி அமைந்து இருந்திருந்தால் இன்று இந்தியாவும் காங்கிரஸ் கட்சியும் உயர்ந்து வளர்ச்சி பெற்றிருக்கும்


Barakat Ali
பிப் 23, 2024 11:07

நல்லது நடந்தா பீல் பண்ணக்கூடாது ..........


veeramani
பிப் 23, 2024 09:37

வெட்டப்பட்ட கை சின்னம்.. காங்கிரஸ் கட்சியின் அழிவு எவராலும் நிறுத்தமுடியாதது. அன்றைய நேரு, இந்திரா, ராஜிவ் போன்ற தலைவர்கள் எடுத்த சில முடிவுகள் இந்தக்கட்சியை பாதாளத்தில் தலிய்விட்டது. இனி மேலே வருவது இயலாத ஒன்று.


ராஜா
பிப் 23, 2024 08:28

பாஸ் காங்கிரஸ் போல் நாட்டுப்பற்று, நாட்டு வளர்ச்சி போன்றவற்றில் அக்கறை கொண்ட கட்சி உலகில் எங்கேயும் இல்லை. அவர்கள் மத சார்பற்றவர்கள். ஆனால், ஒரு மதத்தினர் கழுத்தில் மட்டும் கால் வைத்துக்கொள்வார்கள். நாட்டுக்கு பிரச்சனை வந்தால் நாட்டை உடைக்கவும், பிரிக்கவும், இழக்கவும் தயங்க மாட்டார்கள். அவர்கள் மக்களாட்சி என்று சொல்லிக்கொண்டு கம்யூனிச மற்றும் மன்னர் ஆட்சி நடத்தும் திறமை மிக்கவர்கள்.


பேசும் தமிழன்
பிப் 23, 2024 07:46

கான் கிராஸ் கட்சி தேய்பிறையாவதற்கு என்ன காரணம்..... எல்லாம் அந்த கட்சியை பிடித்து இருக்கும் இத்தாலி மாஃபியா கும்பல் தான் காரணம்.... அதிலும் பப்பு ஒரு ஆள் போதும்.... கட்சியில் இருப்பவர்களை... தலை தெறித்து ஓடும் படி செய்வதற்க்கு.


மேலும் செய்திகள்