உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல சதி : ஆம் ஆத்மி

கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல சதி : ஆம் ஆத்மி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின், மருத்துவ ஆலோசனைகள் மறுக்கப்படுவதன் வாயிலாக, அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது' என, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையினரால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு உள்ளார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, வரும் 27 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு வீட்டில் சமைத்த உணவு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து ஜாமின் பெறும் வகையில், உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்க, கெஜ்ரிவால் இனிப்புகள் மற்றும் மாம்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதாக சமீபத்தில் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டை அவரது ஆம் ஆத்மி கட்சி மறுத்தது. இந்நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அங்கேயே அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரம் பரத்வாஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:கெஜ்ரிவால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 'டைப்-2' நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளர்.சிறையில் அவருக்கு இன்சுலின் வழங்குமாறும், குடும்ப மருத்துவரிடம் 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஆலோசனை கேட்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. இதன் வாயிலாக, சிறையிலேயே அவரை மெல்ல மெல்ல கொல்ல சதி நடக்கிறது. இந்த விவகாரத்தில் திஹார் சிறை நிர்வாகம், பா.ஜ., மற்றும் மத்திய அரசின் பங்கு உள்ளது. நீரிழிவு நோயால், கெஜ்ரிவாலின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம்அடைந்து வருகிறது. உடலில் சர்க்கரை அளவை பரிசோதிக்க இயந்திரத்தை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சிறை நிர்வாகம் அதை மறுக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களில் வெளியே வரும் போது, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களுக்காகவே அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பேசும் தமிழன்
ஏப் 21, 2024 16:58

இது நம்புற மாதிரி இல்லையே.... அவருக்கு அத்தனை முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது ஏன்.... அப்போது தான் ஏதோ சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஆள் என்று இருந்து விட்டு.... இப்போது புலம்பி என்ன பயன் ???


சிந்தனை
ஏப் 21, 2024 16:46

சொல்றத பார்த்தா... இவங்க தான் முன்னாடியே அவருக்கு ஸ்லோ பாய்சன் குடுத்து இருப்பாங்க போல இருக்கு....


Radhika
ஏப் 21, 2024 06:39

இது ஒன்று தான் இப்போது குறைச்சல்.


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2024 06:14

ஆம் ஆத்மி கட்சி திமுகவிடம் இன்னும் பல பாடங்களை கற்க வேண்டியுள்ளது. கெஜ்ரிவால் சின்னபுள்ள தனமா இருகாரு.


R Kay
ஏப் 21, 2024 02:16

உங்களை போல ஒரு நான்கு ஊழல் பெருச்சாளிகளை தவிர வேறு யாருக்கும் படித்த முட்டாளை பற்றிய கவலை இல்லை இந்த நாடகங்கள் எல்லாம் ஓட்டுகளாக நிச்சயம் மாறாது ஒட்டுமொத்த ஆம் ஆத்மீயும் ஊழல் கூட்டம்


Azar Mufeen
ஏப் 21, 2024 01:56

இந்த மனுஷன் சட்டசபை, மாநகராட்சி இப்படி எல்லா தேர்தலையும் பிஜேபியை மண்ணை கவ்வ வச்சா இப்படித்தான் செய்வார்கள்


ராஜாராம்,சாத்தூர்
ஏப் 21, 2024 07:47

அதெப்பிட்றா மூர்க்கன்கள் அனைவரும் இப்படி ஒரே மாதிரி மூர்க்கத் தனமா சிந்திக்கிறீங்க?


k g Sekar
ஏப் 21, 2024 00:54

no body wants ti kill AK because everybody wants him to spend his life in prison and suffer for the rest of his life


Pugazh
ஏப் 20, 2024 23:42

இதுபோல பல நாடகங்களை பார்த்தது எங்கள் தமிழகம்.


Anonymous
ஏப் 20, 2024 23:20

எப்படி எல்லாம் build up குடுத்து ஒரு ஆள "பெரிய" மனுசன் ஆக்குறாங்க


Pandi Muni
ஏப் 20, 2024 21:30

தேச துரோகிகளை மூர்க்க தீவிரவாதிகளை சிறையிலேயே கொள்வதில் தவறில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை