உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயின்ட் கோபெய்ன் ஆலை ஒரகடத்தில் கட்டுமானம் துவக்கம்

செயின்ட் கோபெய்ன் ஆலை ஒரகடத்தில் கட்டுமானம் துவக்கம்

சென்னை:செயின்ட் கோபெய்ன் இந்தியா நிறுவனம், சென்னையை அடுத்த ஒரகடத்தில் அமைந்துள்ள புதிய ஆலையில், கண்ணாடி உற்பத்தி மற்றும் இன்சுலேஷன் பிரிவுகளுக்கான கட்டுமான பணிகளை துவங்கியுள்ளது. கிட்டத்தட்ட 3,400 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. முதல்வர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கிட்டத்தட்ட 122 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த உலக வளாகத்தில், கண்ணாடி இழை, ஜிப்சம் பூச்சு பலகைகள், பூச்சுகள், ப்ளோட் கிளாஸ் எனும் மிதவைக் கண்ணாடி, சோலார் கண்ணாடி, பசை உட்பட பல பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இருக்கும். புதிய ப்ளோட் கிளாஸ் பிரிவு, நாள் ஒன்றுக்கு 1,000 டன் உற்பத்தித் திறனைக் கொண்டதாகும். இந்த ஆலை முழுதுமாக செயல்பாட்டுக்கு வந்ததும், இப்பகுதியில் 1,100 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ