உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது கூடாது!: ஐகோர்ட் உத்தரவு

எந்த கோவில் நிதியிலிருந்தும் கட்டடங்கள் கட்டுவது கூடாது!: ஐகோர்ட் உத்தரவு

மதுரை : பழனி தண்டாயுதபாணி கோவில் நிதியில் இருந்து திருமண மண்டபம் கட்டும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட் கிளையின் உத்தரவை சுட்டிக்காட்டி, 'கோவில் நிதியை, அரசு நிதியாக கருத முடியாது. அந்நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் என, பொதுப் பயன்பாட்டுக்கான கட்டடங்களை அமைக்கும் தமிழக அறநிலையத்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க அறநிலையத்துறை, 2021 - 2022ல் அறிவிப்பு வெளியிட்டது; இது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=knygqgn8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவில் நிதியை, ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச் சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோவில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை, கல்லுாரியை நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் இல்லங்கள், பக்தர்களின் நலனுக்கான மருத்துவமனைகள், மருந்தகங்கள் நிறுவ பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதுபோல், மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து கோவில்களுக்கு நிதி வசூலிக்கப்படுகிறது. மத நோக்கங்களுக்காக அல்லது திருவிழாக்கள் நடத்த அல்லது கோவில்களின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக நன்கொடை வழங்கப்படுகிறது. கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. அதை பொது நோக்கங்களுக்காக அரசின் நிதியாக பயன்படுத்த முடியாது. கோவில் நிதியில், வணிக நோக்கில் திருமண மண்டபங்கள் உட்பட கட்டடங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது என, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிதியிலிருந்து திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைக்கு எதிரான மற்றொரு வழக்கில் இந்நீதிமன்றம் ஆக., 19ல் உத்தரவிட்டது. அதே உத்தரவு இவ்வழக்கிற்கும் பொருந்தும். கோவில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதே தீர்ப்பை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் வெங்கடேஷ் சவுரிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனுவிலும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். கள்ளழகர் கோவில் சவுரிராஜன் மனுவில் கூறியிருந்ததாவது: மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில், 40 கோடி ரூபாயில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கடைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணியை மேற்கொள்ள, தமிழக அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில், கோவில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பணியை கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிராஜ் அனிருத் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கோவில் கடைகளில் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் தான் அதிகம் உள்ளன. பூஜை பொருட்கள் குறைந்த அளவில் தான் உள்ளன. கோவில் கடைகளில் பூஜை பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என, உத்தரவாதம் அளிக்க வேண்டும். கோவில் நிதியை அரசின் நிதியாக கருத முடியாது. அந்நிதியை மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது. கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த இரு தீர்ப்புகளும், அறநிலையத் துறையின் கோவில் நிதிப் பயன்பாட்டுத் தொடர்பான உத்தரவு அனைத்தையும் ரத்து செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Chandru
ஆக 29, 2025 21:14

Shameless Court sc i mean supreme court will give a judgement in favour of sekar babu


Sivak
ஆக 29, 2025 21:04

அறநிலையத்துறை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் மத நடவடிக்கை செலவில் வராதே ... கோவில் பணத்தில் அரசு ஊழியர்களுக்கு எதற்கு சம்பளம் ? அரசு ஊழியர்களுக்கு அரசு தானே சம்பளம் தர வேண்டும்?


T.sthivinayagam
ஆக 29, 2025 20:15

தமிழக ஆலயங்களில் பணிக்கு வந்தவர்கள் ஆலயத்தையே அபகரிக்கும் கயவர்களாக மாறும் நிலை உருவாகிக் கொண்டுள்ளதாக கோவில் கட்டி பொன் பொருள் நிலம் உண்டியல் கொடுத்த தமிழர்கள் ஆதங்கபடுகிறார்கள்


ஆரூர் ரங்
ஆக 29, 2025 19:08

செ. பா க்குப் பிறகு சே. பா வுக்கும் செம குட்டு.


Sundaran
ஆக 29, 2025 18:21

சமீபத்திய தீர்ப்புகளிலேயே மிகவும் சிறந்தது இது தி மு க கோயில் சொத்தை கொள்ளை அடிப்பதை தடுக்கும் அங்குசம் இது . வாழ்க நீதி .


ramesh
ஆக 29, 2025 20:01

திருச்செந்தூர் அறங்காவலர் படுகொலை வழக்கு தெரியுமா உங்களுக்கு சுந்தரன் . mgr ஆட்சியில் உண்டியலில் போடப்பட்ட வைரவேல் திருடப்பட்டது . அந்தநேரத்தில் ஆழும் கட்சியை சேர்ந்த mla மீது இந்த கொலை வழக்கு மக்களால் குற்றம் சாட்டப்பட்டது . அதே mla ஓரிரு வருடங்களில் முருகன் வாகனத்தின் பெயர்கொண்ட லாரி மோதி மரணம் அடைந்தார் . இது வரலாறு


ramesh
ஆக 29, 2025 20:07

டீ30 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி நெல்லைஅப்பர் கோவிலில் சாமியை ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் வாகனங்களில் வேய பட்டு இருந்த வெள்ளி தகடுகளை உரித்து திருடுவதாக 20க்கும் மேற்பட்ட பட்டர்கள் மீது வழக்கு தொடுக்க பட்டது . இது குறித்து செய்திகள் பக்கம் பக்கமாக தினமலர் உள்பட அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வந்தது . இது வரலாறு . உலகத்தில் எவரும் யோக்கியன் இல்லை


பாரதி
ஆக 29, 2025 16:04

இவ்வளவு நாள் செய்த தவறுக்கு தண்டனை கொடுத்தால் தான் அதற்கு பெயர் நியாயம் இது என்ன நியாயமோ


சிந்தனை
ஆக 29, 2025 16:03

அரசு ஊழியர்கள் வயிறு வளர்க்க சம்பளம் கொடுத்து ஏற்கனவே எல்லாம் போச்சு இப்பொழுதாவது சிலர்களுக்கு கண் தெரிகிறது அதுவும் பலருக்கு பிடிக்காது என்ன செய்வாங்களோ


Yaro Oruvan
ஆக 29, 2025 14:59

உப்பீஸ் கதறுவானுவளே வட போச்சே


T.sthivinayagam
ஆக 29, 2025 13:20

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தமிழர்கள் கட்டியது அந்த ஆலயங்களுக்கு நீதியும் தமிழர்கள் கொடுத்து தான் இதில் ஓசி வடைகள் ஏன் நல்லது செய்வதை தடங்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்


ஆரூர் ரங்
ஆக 29, 2025 14:33

மீனாட்சி கோவிலைக் கட்டியது திருமலை நாயக்கர் எனும் தெலுங்கர். இது போல ஏராளமான ஆலயங்களை விஜயநகர மன்னர்கள் கட்டினர். மற்றபடி பெரும்பாலான ஆலயங்கள் சுற்றுப்பட்டு பொதுமக்களால் கட்டப்பட்டவை. ஒருமுறை கட்டி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுவிட்டால் அந்த ஆலயம் இறைவனின் சொத்து. மனிதர்களுக்கு (முக்கியமாக )நாத்திகவாதிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.


T.sthivinayagam
ஆக 29, 2025 16:09

தமிழகத்தில் பெரும்பாலான கோவில் கடவுள்கள் சுயம்பு மூர்த்தி தான் அதற்கு கோவில் கட்டி பொன் பொருள் நிலம் கொடுத்து தமிழ்ர்கள் தான் கோவிலில் உண்டியல் வைத்த பின் தான் பணியாளர்கள் வந்தனர் உண்டியல் இல்லாத கோவில்களை சுயநல வாதிகள் உரிமை கொண்டாடுவது இல்லை


vijai hindu
ஆக 29, 2025 11:37

இருக்கவே இருக்க உச்ச நீதிமன்றம் நாங்க அங்க பாத்துக்குறோம் இதுதான் மாடல் ஸ்டைல்


புதிய வீடியோ