உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கை டிச.,9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; திருப்பரங்குன்றம் வழக்கை டிச.,9க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை

நமது சிறப்பு நிருபர்மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அரசு கோரிக்கை

இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

உத்தரவு

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Naga Subramanian
டிச 05, 2025 11:33

குரள் :-சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி விளக்கம்:- ஒரு துலாக்கோல் சமமாக இருந்து பாரத்தை சரியாகக் காட்டுவது போல, மனிதர்கள் பாரபட்சமின்றி, நடுநிலைமையோடு செயல்படுவதே அவர்களுக்கு அழகு


N Annamalai
டிச 05, 2025 11:25

பிடிவாதம் பிடிவாதம். தீபம் ஏற்ற மாட்டார்கள் .கேவலமான அரசியல் .அண்டசராசரத்திற்கு அதிபதி .எப்படி தீபம் ஏற்றுவது என்று அவருக்கு தெரியும் .டிசம்பர் 9 தேதி க்குள் ஒன்றும் நடக்காது .வட்டத்தில் ஆரம்பித்த இடத்தில வந்து நிற்கும் விடியாத அரசு .


Krishnakumar
டிச 05, 2025 11:16

நீதிபதி அவர்களே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத இவர்களை ஒரு பத்துநாள் ஜாமினில் வரமுடியாதபடி தூக்கி உள்ளேபோடுங்கள் அப்போதுதான் திருந்துவார்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை