உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர் மழை; சுரங்கப்பாதைகளின் நிலவரம் இதோ!

தொடர் மழை; சுரங்கப்பாதைகளின் நிலவரம் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் தொடரும் கனமழையால் 9 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, கத்திவாக்கத்தில் 121.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கத்திவாக்கம், மாணிக்கம் நகர், வியாசர்பாடி, பெரம்பூர், ஸ்டான்லி நகர், நுங்கம்பாக்கம், கெங்கு ரெட்டி, துரைசாமி, அரங்கநாதன் ஆகிய 9 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த 9 சுரங்கப்பாதைகள் தவிர மற்ற, 12 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 21 சுரங்கப்பாதைகளில், 9 சுரங்கப்பாதைகளில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. எனினும் வாகனங்கள் தொடர்ந்து சென்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Devanand Louis
நவ 30, 2024 12:49

சிங்காரி சென்னையின் அவலம் - 30 நிமிடம் பெய்தமலையில்கூட மழைத்தண்ணீர் தேங்குகிறது , இதுதான் சிங்காரி சென்னை . அந்த 4000 கொடிகள் பணத்தை ஒழுங்காக அரசு செலவளித்துஇருந்தால் இந்த நிலைமை வந்துஇருக்காது . சிங்கார சென்னையாகஇருந்தது AIADMK ஆட்சியில் ஆனால் இந்த திராவிட மாடல் ஊழலமுகுந்த ஆட்சியின் சிங்காரி சென்னையாக மாறிய அவலம்


sankar
நவ 30, 2024 11:17

ரத, கஜ, துரக, பதாதிகளோடு புயல்மழை அரக்கனோடு போரிட அரசு தயாராக இருக்கிறது


kulandai kannan
நவ 30, 2024 11:12

எந்தக் கொம்பனாலும்.....


Anand
நவ 30, 2024 10:57

ஆனால் பாருங்கள், சென்னையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை என உருட்டுவானுவ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை