உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்: இ.பி.எஸ்., வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவத்திற்கு தார்மிக பொறுப்பு ஏற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் '' என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டு அறிந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vnuxrx9x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அனைவரும் ஏழைகள்

பிறகு அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் கொடி கட்டி பறக்கிறது. நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. கருணாபுரத்தில் முக்கிய அலுவலகங்கள் இருந்தும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. இறந்தவர்கள் அனைவரும் ஏழைகள். போலீஸ் ஸ்டேசன் பின்புறமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்றால், அரசின் நிர்வாக திறமையை எண்ணிப்பார்க்க வேண்டும்இதற்கு பின்னாள் பெரிய கும்பல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. இதனால் தான் போலீஸ் ஸ்டேசன் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது. இல்லாவிட்டால், பெரிய கள்ளச்சாராய விற்பனை நடக்குமா?

சிபிசிஐடி

இந்த சம்பவம் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்தாண்டு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல் கிடைத்து இருந்தால் அரசு நடவடிக்கை எடுத்து இருக்கும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் விற்பனை தடையின்றி நடப்பதாக கள்ளக்குறிச்சி எஸ்பி.,யிடம் அதிமுக எம்எல்ஏ., போனிலும் நேரிலும் புகார் தெரிவித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக இருக்கிறது. கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடுகிறது. நாமக்கல்லில் குடோனில் வைத்து திமுக பிரமுகர் கள்ளச்சாராயம் விற்கிறார். புகார் அளித்ததும், அவரை கைது செய்யாமல், அங்கு வேலை செய்த வட மாநிலத்தவரை கைது செய்கின்றனர்.

பதவி விலக வேண்டும்

மரணத்திற்கு காரணம் முதல்வரின் நிர்வாக திறமையின்மை. திமுக நிர்வாகிகள் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளனர். இவ்வளவு மரணத்திற்கு காரணமான நிர்வாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.விக்கிரவாண்டி சட்டசபை தேர்தல் நடக்கிறது. பூத் வாரியாக, ஒன்றியத்துக்கு அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அக்கறையை கள்ளக்குறிச்சியில் காட்டி இருக்கலாம். கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் உயிரிழக்கின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இருந்து டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளித்து இருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், மக்களை பற்றி முதல்வருக்கு அக்கறை இல்லை. கள்ளச்சாராயத்தினால் யாரும் இறக்கவில்லை என மாவட்ட கலெக்டர், பச்சை பொய் சொல்கிறார். அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார். பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும். மாநிலத்தில் அரசே செயல்படவில்லை. திமுக ஆட்சியில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

மாதம் ரூ.5000

கள்ளச்சாராய விவகாரத்தில் பெற்றோர்களை இழந்த ஒரே குடும்பத்தை சார்ந்த 3 குழந்தைகளின் கல்விச் செலவை அ.தி.மு.க., ஏற்கும். அந்த குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., சார்பில் மாதந்தோறும் ரூ.5000 வழங்கப்படும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

நேரில் ஆறுதல்

இதனைத்தொடர்ந்து உயிரிழந்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். கருணாபுரத்தில் உள்ள பல தெருக்களிலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும் நிலையில், ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்தோரின் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு, குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Prince Paul
ஜூன் 20, 2024 18:11

13 பேரை சுட்டு கொன்னப்போ ராஜினாமா பண்ணியிருக்கலாம்ல


தஞ்சை மன்னர்
ஜூன் 20, 2024 18:03

ஏழை என்கிறீர் குடிக்க மட்டும் காசு எங்கேர்ந்து வந்தது முதலில் இதை வைத்து அரசியல் செய்யாமல் ஓட்டு மொத்த அரசியல் தலைவரும் கண்டிக்கவேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 10:53

ஐம்பது ரூபாய் பாக்கெட்... அதை ஏழையால் வாங்க முடியாதா?? ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பதே இதுதான்..


J. Vensuslaus
ஜூன் 20, 2024 15:49

ராஜினாமா அவசியமில்லை. . எல்லோரும் அவரவர் வேலைகளை பாருங்கள்.


J. Vensuslaus
ஜூன் 20, 2024 15:37

ராஜினாமா தேவை இல்லை. செத்தவர்கள் எல்லாம் மகா குடிகாரர்கள். அவர்கள் குடும்பங்கள் நிம்மதி பெருமூச்சு விடும்.


angbu ganesh
ஜூன் 20, 2024 16:12

பத்து லக்க்ஷம் சார் நான் கூட கள்ள குறிச்சி போகலாம்னு இருக்கேன்


செந்தமிழ் கார்த்திக்
ஜூன் 20, 2024 15:06

செத்தவன் எல்லாம் என்னமோ சுதந்திர போராட்ட தியாகி மாதிரி கத்தறானுங்க. சட்ட விரோதமா விஷ சாராயத்தை காச்சுறவன் கிட்ட போயி காசு குடுத்து- சட்ட விரோதமா வாங்கி குடிச்சிட்டு செத்து போயிருக்கானுங்க. இவர்கள் தான் சமூக விரோதிகள். விஷ சாராயம் காய்ச்சி விற்ற சமூக விரோதிகள் மீது அரசு மிக கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 20, 2024 17:50

கள்ளச்சாராயம் குடிப்பவர் எல்லாம் கொல்லப்பட வேண்டியவன் என்று முடிவு செய்ய நீ ஒன்றும் சுப்ரீம் கோர்ட் அல்ல.


S Srinivasan
ஜூன் 20, 2024 15:01

There is a nexus between police, govt and dmk party, when last time happened there is no action, collector cannot take actions as his life will be dangerous, if police given free hand this wont happen, money comes to party head by any means why elected govt should worry


GMM
ஜூன் 20, 2024 14:22

ஸ்டாலின் முதல்வர் ஆனத்திற்கு நீர் தான் காரணம். 40 க்கு 40 நீர் தான் காரணம். புதிய வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாகும் வரை, தேர்தலில் மீண்டும் ஸ்டாலின் அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி கொள்ள போவது உறுதி. பல கட்சிகள் பெட்டி வாங்கி அடங்கி விடும். மந்திரி பதவி கூட கேட்பது இல்லை. குற்ற பிணைப்பில் பலர் உள்ளனர். ராஜினாமா செய்து என்ன பயம்.?


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 20, 2024 16:13

இறந்தவர்கள் எண்ணிக்கையும் 40 தான்


Devanand Louis
ஜூன் 20, 2024 14:21

திராவிட மாடல் அரசு இப்பொழுது போதை மாடல் அரசாக மாறிவிட்டது - எங்கும் விற்பனை கள்ளச்சாராயம், எங்கும் ஊழல் லஞ்சம் , கொலை கொள்ளைகள்


Nallavan
ஜூன் 20, 2024 14:05

கள்ள சாராயம் குடித்து ஏழை மக்கள் இறந்துவிடுவார்கள் என்ற யோசனையை முன்பே ஈ பி எஸ் தெரிவித்திருந்தால் இந்த உயிர் இழப்பை தடுத்திருக்கலாம்


Kadaparai Mani
ஜூன் 20, 2024 13:49

பாராட்டுகிறேன் எதிர்க்கட்சி தலைவர் தன் கடமை செய்ததற்காக. கண்டிப்பாக அடுத்த ஆட்சி அதிமுக தலைமையில் மலரும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 20, 2024 18:27

கூட்டணி ஆட்சியா ????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை