மேலும் செய்திகள்
சீட்டு நடத்தி மோசடி மேலும் ஒருவர் கைது
24-Mar-2025
கந்தம்பட்டி:டூ - வீலரில் சென்ற தம்பதி, காஸ் டேங்கர் லாரியில் சிக்கி இறந்தனர்.சேலம் மாவட்டம், ஓமலுார், பாகல்பட்டி அருகே பூமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சேட்டு, 58; வெள்ளி பட்டறை அதிபர். இவரது மனைவி ஜோதி, 54. இவர்கள், 'டியோ' மொபட்டில், சேலம், எருமாபாளையத்தில் உள்ள மகள் அன்னபூரணி வீட்டுக்கு வந்தனர். தொடர்ந்து, தம்பதியர் தங்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். சேட்டு, 'ஹெல்மெட்' அணியவில்லை.மாலை, 6:15 மணிக்கு, கந்தம்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, காஸ் டேங்கர் லாரியை கவனிக்காமல், சேட்டு மொபட்டை வலதுபுறம் திருப்பினார். அப்போது தடுமாறி விழுந்த தம்பதியர், லாரி பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூரமங்கலம் போலீசார், டேங்கர் லாரி டிரைவரான, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, 46, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.
24-Mar-2025