உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை

திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். பணம் மற்றும் நகைக்காக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், தோட்டத்து வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோரை கொலை செய்து, பணம், நகை போன்றவற்றை கொள்ளையடித்து செல்லும் சம்பவம், சமீபத்தில், அதிகளவில் நடந்து வருகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இத்தகைய சம்பவம் தோட்டத்து வீடுகளில் தனியாக வசிப்போர் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நர்ஸ் ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலத்தில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65). மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், மனைவி வித்யா(60) உடன் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவரையும் வெட்டி விட்டு தலைமறைவாகினர். இதில் படுகாயம் அடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வித்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை மற்றும் பணத்திற்காக இச்சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டில் நண்பர்கள் கொலை

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் விமல்(22). இவரது நண்பர் ஜெகன்(24). இவர்களுக்கும், வேறொரு கோஷ்டிக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர், இருவரையும் சராமரியாக வெட்டினார். இதில் விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகன், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkatesh
மே 11, 2025 23:15

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று சொன்னதாக கேள்வி பட்டேன்... அது யார் என்று 200 ரூபாய் க்கு வாலையும் ஆட்டும் யாராவது சொல்ல முடியுமா?


Kjp
மே 11, 2025 21:35

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி இது. நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டு இருக்கிறார்.தனக்கு தானே பாராட்டு பத்திரம் வாசித்து கொண்டு இருக்கிறார்...


Kasimani Baskaran
மே 11, 2025 20:44

திடீர் தேசபக்தி பரவசத்தில் மாடல் அரசு தேசிய கீதம் பாட கற்றுக்கொண்டு இருப்பதால் வேறு வேலை ஒன்றும் நடக்காது. காவல்துறை ஸ்விச்ட்டு ஆப்.


J.Isaac
மே 12, 2025 12:29

பெத்தவங்க பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்க்க முடியாத ,கண்டிக்க முடியாத காலம். எதற்கெடுத்தாலும் அரசை குறை சொல்லி என்ன பயன்


தமிழ்வேள்
மே 12, 2025 21:28

ஐசக், நீதிபோதனை நல்லொழுக்க வகுப்புகளை தடை செய்து, ஹேப்பி ஸ்ட்ரீட் மற்றும் பள்ளிகளில் குத்தாட்டம் திருவிழா நடத்தி ஒழுக்கம் அற்ற நாத்திக தேசப்பற்று இல்லாத தலைமுறைகளை உருவாக்கியது கருணாநிதி வகையறா ஸ்டாலின் வகையறா க்களின் திமுக அரசு மட்டுமே... ஒழுக்கம் அற்ற இரண்டாம் மூன்றாம் தலைமுறை கிரிமினல்கள் ஆக உள்ளது...மூல முழுமுதற் காரணம் திருட்டு திராவிட இயக்கம்


மீனவ நண்பன்
மே 11, 2025 20:39

அமைதிப்பூங்காவில் சலசலப்பா ..அப்பா வருத்தப்படவில்லையா ?


Anantharaman Srinivasan
மே 11, 2025 20:29

முதியோர் கொலை தக்க பாதுகாப்பின்மையால் நடந்தது. இளைஞர்கள் கொலை வீண் வம்பால் தேடிக்கொண்டது.


R SRINIVASAN
மே 12, 2025 04:51

அனந்தராமன் ஸ்ரீனிவாசன் -முதியோர் கொலை தக்க பாதுகாப்பு இன்மையால் நடந்தது என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியானால் ஒவ்வொரு முதியவரும் செக்யூரிட்டி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா? முட்டாள்தனமாக கருத்து போடுவதை நிறுத்துங்கள். காமராஜர் ஆட்சியில் F.V.ARUL என்பவர் இன்ஸ்பி டோர் ஜெனெரலாக இருந்தார் .அவரை பார்த்தாலே குத்ரவாளிகள் நடுங்கினார்கள். காரணம் காமராஜர் காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை