உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15 ஆவது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15 ஆவது முறையாக நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். வரும் 22ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மனுத்தாக்கல்

தனக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், ஆவணங்களில் அமலாக்கத்துறை திருத்தம் செய்து உள்ளது. கைது செய்யும் நோக்கில் விதிகளை மீறி போலியாக ஆவணங்கள் அமலாக்கத்துறை தயாரித்து உள்ளது. ஆவணங்களை முழுமையாக வழங்காமல் விசாரணை தொடர்வது முறையற்றது எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜியின் புதிய மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டு, ஜன. 22க்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி