உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் சொத்து பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு

கோவில் சொத்து பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : 'கடவுள் மைனர்' என்பதால், கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு' என உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:கரூர் மாவட்டத்தில் பல கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அல்லது முறைப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.கோவில்கள் தரப்பில், 'சட்டம் - -ஒழுங்கு பிரச்னையை கருதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை தவிர்க்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:பெரும்பாலும் சட்ட பட்டப் படிப்பு படித்தவர்கள் கோவில்களில் செயல் அலுவலர்களாக உள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஒரு பக்தர், நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியுள்ளது.கடவுள் மைனர்... ஆதலால் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு உள்ளது.சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனக்கூறி, ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையை தடுப்பதற்கு பதிலாக, கோவில் நிலத்தை மீட்க அறநிலையத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.அதற்கு வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலை கலெக்டர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
ஜன 18, 2024 20:27

கோவில் சொத்து பாதுகாக்கும் பொறுப்பு நீதிமன்றம், மாவட்ட நிர்வாகத்திற்கு உண்டு'... ஆமாங்க ...... அறநிலையத்துறைக்கு இல்லை .......


M S RAGHUNATHAN
ஜன 18, 2024 16:42

இந்த தீர்ப்பை RSB மீடியாக்கள் விவாதிக்க மாட்டார்கள். அரசுக்கு இது ஒரு பெரும் தலை குனிவு. நீதிபதி கூறி இருக்கும் ஒரு விஷயம் முக்கியமானது. பெரும்பாலான செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணை ஆணையர்கள், இணை ஆணையர்கள் வக்கீலுக்கு படித்தவர்கள். ஏன் அவர்களுக்கு இது தெரிய வில்லை. எஜமான் HRCE Act நடத்தும்போது நாங்கள் வெளியே சென்று விட்டோம். தேர்வுகளில் Choice இல் விட்டு விட்டோம் என்பார்கள்.


Raa
ஜன 18, 2024 12:02

"கோவில்கள் தரப்பில், 'சட்டம் - -ஒழுங்கு பிரச்னையை கருதி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை தவிர்க்குமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை..." ->>> இதை சொல்ல வெட்கமாக இல்லை?


Seshan Thirumaliruncholai
ஜன 18, 2024 09:51

நீதிமன்றம் கூறியது தவறு இல்லை. குழந்தையும் தெய்வமும் ஓன்று. குழந்தையை காப்பாற்றுவதுபோல் தெய்வத்தையும் காக்கவேண்டும். குழந்தையை கொஞ்சுவதுபோல் கடவுளை கெஞ்சவேண்டும். எப்படி கெஞ்சவேண்டும்? சொத்து வருமானம் தவறான முறையில் கையாளக்கூடாது என்று.


Dharmavaan
ஜன 18, 2024 09:21

சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையாள முடியாத அரசை ஏன் டிஸ்மிஸ் செய்யக்கூடாது


Dharmavaan
ஜன 18, 2024 09:20

sattam


Ramesh Sargam
ஜன 18, 2024 09:16

கடவுள் மைனர்... ஆஹா என்ன சொல்வதென்று தெரியவில்லை. நம்மை படைத்த கடவுளையே மைனர் என்று கூறிவிட்டதே இந்த நீதிமன்றம்...


ராமகிருஷ்ணன்
ஜன 18, 2024 06:48

விடியாத விடியலின் ஆட்சியில் கோயில்களை கொள்ளை அடிப்பதற்கு அரசு, அதிகாரிகளுக்கு கட்சிகாரர்களுக்கு மட்டுமே உரிமை.


Rajarajan
ஜன 18, 2024 06:33

இதற்கு மேலும் ஹிந்து அறநிலைய துறை வேண்டுமா? கலைத்து விட்டு, கோவில்களுக்கு தனியான அமைப்பை உருவாக்குவது நல்லது. அதில் தனியார் அறக்கட்டளை, ஆதீன நிர்வாக பங்களிப்பு தான் வேண்டும்.


Varadarajan Nagarajan
ஜன 18, 2024 06:25

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு சிலைகள் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும், வழிபாடு முடிந்து சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலம் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும், சிதம்பரம் கோவிலுக்குள் சென்று வழிபட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும். அப்படி என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கிளப்புவது யார்? அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து உள்ளே வைக்கவேண்டுமா அல்லது வழிபாட்டை தடை செய்ய வேண்டுமா?


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ