உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,285 பேர் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

1,285 பேர் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை

வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜன்டுகள் போல செயல்படும் சட்டவிரோத கும்பல், நாட்டின் பல பகுதிகளில் இருந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு ஆட்களை அழைத்துச் சென்று, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் குற்றங்களில் ஈடுபட பழக்கப்படுத்தி வருகிறது. அத்தகைய குற்றங்களில் ஈடுபட மறுக்கும் நபர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சுவது உள்ளிட்ட கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.இதுகுறித்து விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், தமிழகத்தில் இருந்து கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மர் நாடுகளுக்கு, 1,285 பேர் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தி, 'உங்கள் உறவினர்கள் எப்போது சென்றனர்; அழைத்துச் சென்ற ஏஜென்ட் யார்; கடைசியாக உங்கள் உறவினர்கள் எந்த எண்களில் இருந்து பேசினர்' என்பது உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.அந்நாடுகளில் இருந்து, 326 பேர் திரும்பி வந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், சைபர் குற்றங்களுக்கு அடிமையாக்கும் கும்பல் குறித்து துப்பு துலக்கி வருகிறோம். மலேஷியாவை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

1,285 பேர் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை