உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயலி வழி பரிவர்த்தனையில் குற்றவாளிகள் புதுவித மோசடி

செயலி வழி பரிவர்த்தனையில் குற்றவாளிகள் புதுவித மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மொபைல் போன் செயலி வாயிலாக, யு.பி.ஐ., பண பரிமாற்றத்தில் ஈடுபடுவோரை குறிவைத்து, புதிய வகை மோசடி நடப்பதாக, சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். போலீசார் கூறியதாவது: வங்கி கணக்குகளை இணைத்து பயன்படுத்தும், 'கூகுள்பே, போன்பே' உள்ளிட்ட செயலிகள் வாயிலாக, சைபர் குற்றவாளிகள், 5,000 ரூபாய் அனுப்புவர். அதன்பின், 'தவறு தலாக பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை திரும்ப அனுப்புங்கள்' என்று, அதன் வழியாகவே கோரிக்கை விடுப்பர். அப்போது, நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளதா என்பதை அறிய முற்படுவீர்கள். அதற்காக, செயலியில் ரகசிய குறியீடு எனப்படும், 'பின் நம்பர்'ஐ உள்ளீடு செய்வீர்கள். அந்த நேரத்தில், சைபர் குற்றவாளிகள், உங்கள் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்து விடுவர். இத்தகையை தந்திரமான மோசடியில், தற்போது சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், சைபர் குற்றவாளிகள் தவறு தலாக உங்களுக்கு பணம் அனுப்பி விட்டதாக கூறி, அதை திரும்ப அனுப்ப சொன்னால் எச்சரிக்கையாக செயல்படுங்கள். அத்துடன், உங்கள் மொபைல் போன் செயலியில், சைபர் குற்றவாளிகள் பணத்தை திரும்ப பெறுதல் தொடர்பாக விடுத்த கோரிக்கையை ரத்து செய்ய, நீங்களே உங்கள் பின் நம்பரை தவறு தலாக உள்ளீடு செய்யுங்கள். உங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை, சரியான பின் நம்பரை பதிவு செய்ய வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

N Annamalai
டிச 08, 2024 13:10

வங்கிகள் ஏன் இதை தடுக்க முடியவில்லை? அணைத்து ...களும் ஒன்று சேர்ந்து முடிவு கட்ட வேண்டும். யு பி ஐ மூலம் ஐந்து ஆயிரம் மட்டும் என்று விதி கொண்டு வரலாம் .


Dharmavaan
டிச 08, 2024 09:03

இதை தடுப்பது /பிளாக் செய்வது எப்படி


VENKATASUBRAMANIAN
டிச 08, 2024 08:52

தெரியாதவர் பணம் அனுப்ப வாய்ப்பே இல்லை. அதனால் அதை நம்பக்கூடாது.


அப்பாவி
டிச 08, 2024 06:37

உங்க அக்கவுண்ட்டில் பணம் வந்ததா என்பதை அந்த வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்தி சொல்லிடும். முதலில் அதைப் பாருங்க. நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு யாரு பணம் அனுப்புவான்னு அலையாதீங்க. அது சரி. உங்க வங்கி கணக்கு விவரங்கள் அவனுக்கு எப்பிடித் தெரியும்? வங்கியிலேயே இருக்கும் திருட்டு களவாணிங்க குடுத்திருப்பாங்களோ?


Kalyanaraman
டிச 08, 2024 07:55

"உங்க வங்கி கணக்கு விவரங்கள் அவனுக்கு எப்பிடித் தெரியும்?" ஒரு ஃபோன் நம்பரை எந்த யுபிஐ செயலியில் போட்டாலும் அந்த எண் ஏற்கனவே வங்கி கணக்குடன் லிங்க் ஆகியிருந்தால் தொடர்புடைய பெயரும் வரும். அந்த எண்ணுக்கு பணத்தை செலுத்தினால் உங்கள் கணக்குக்கு பணம் வந்துவிடும். வங்கி விவரங்கள் தேவையில்லை.


Dharmavaan
டிச 08, 2024 11:58

போன் நெம்பரை போட்டு பார்க்க ஏன் ஒரு பாஸ்வேர்ட் கொடுக்க கூடாது


Rajinikanth
டிச 08, 2024 05:07

இது முகநூலில் வந்த செய்தி. இதன் நம்பகத்தன்மையை சரி பார்க்காமல் அப்படியே தினமலரில் வெளியிட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது .


புதிய வீடியோ