உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழநியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

பழநியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் வந்த வாகனங்கள் வருகையால் கிரிவீதி, சுற்றுலா வாகன நிறுத்துமிடம் நிரம்பியது. கிரிவீதியில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வின்ச் நிலையங்கள் அருகே வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். கோயில் செல்ல, வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஸ் வசதி குறைவாக இருந்ததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர். கூட்டத்தில் தவறிய நபர்களை கண்டறிய உதவி மையங்களை அதிகரிக்க வேண்டும். பாதுகாவலர்களை அதிகரிக்க வேண்டும். பஸ் வசதியை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ