உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப்., ஆய்வு

விஜய் வீட்டில் சி.ஆர்.பி.எப்., ஆய்வு

சென்னை: சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில், த.வெ.க., தலைவர் விஜய் வீடு உள்ளது. அவருக்கு மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த எட்டு பேர், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் விஜய் வீட்டிற்குள், மன நலம் பாதித்த அருண், 24, என்பவர் நுழைந்தார். இதனால், ஒய் பிரிவு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, உ.பி., மாநிலம், நொய்டாவில் இருந்து வந்த, சி.ஆர்.பி.எப்., தலைமையிடத்து, டி.ஐ.ஜி. சஞ்சய் குமார், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வந்த கமாண்டன்ட் மனோஜ் குமார் ஆகியோர் நேற்று விஜய் வீட்டில் ஆய்வு செய்த னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை