உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்த 48 மணிநேரத்தில் தென் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

அடுத்த 48 மணிநேரத்தில் தென் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுத்த 48 மணிநேரத்தில் தென் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது;இந்திய கடல்பகுதிகளில் 3 சுழற்சிகள் ஒன்றாக காணப்படுகின்றன. நேற்று அந்தமான் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(நவ.24) மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரினை பகுதிகளில் காணப்படுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும்.பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும். குமரி பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, நாளை(நவ.25) குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர், அது வலுவடைய வாய்ப்பு இருக்கிறது.3வது சுழற்சி அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நீடிக்கிறது. இந்த 3 சுழற்சிகளிலும் சில மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. இவை மூன்றும் ஒன்றாக சேர்ந்து நகர்வதற்கான வாய்ப்பும் உண்டு.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்திருக்கிறது. 4 இடங்களில் அதி கனமழையும், 15 இடங்களில் மிக கனமழையும், 76 இடங்களில் கனமழையும் பதிவாகி இருக்கிறது. தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்விரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாளை(நவ.25) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபும் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.நவ.26ம் தேதி 7 மாவட்டங்களிலும், 27ம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தஞ்சை,திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நவ.28ல் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ 29ம் தேதி வடகடலோரத்தைச் சேர்ந்த 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு வானிலை மைய இயக்குநர் அமுதா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்