உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்.28ல் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது மோந்தா புயல்; வானிலை மையம் அறிவிப்பு

அக்.28ல் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது மோந்தா புயல்; வானிலை மையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே அக்.28ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=exvb7hja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது, மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.தற்போது சென்னைக்கு 970 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும். அக்டோபர் 28ம் தேதி மாலை அல்லது இரவு நேரம் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கபட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' விடுக்கப்படுகிறது.காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதால், வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும். எனவே, தமிழக கடலோரம், ஆந்திரா, மத்திய மேற்கு பகுதிகளுக்கு, 28ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

duruvasar
அக் 25, 2025 14:28

காக்கிநாடா உன்னுது பாவாடை நாடா என்னுது விவேக் ஜோக் ஞாபகம் வருது


SUBRAMANIAN P
அக் 25, 2025 14:15

நம்ம விடியல் ஆட்சியைக்கண்டு புயல் கூட பயந்து ஓடிவிட்டது. ஆனா இதனால கொட்டப்போற மழை சென்னையை புரட்டிபோட்டுவிடும். நான் சொல்வது நடக்குதா இல்லையா பாருங்க.. அப்போ தெரியும் விடியல் ஆட்சியின் தோல்வி அலங்கோலம். 4000 கோடியின் லட்சணம்.


angbu ganesh
அக் 25, 2025 14:02

பிஜேபி சதி இது - ஸ்டாலின்


sundarsvpr
அக் 25, 2025 13:32

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மலை அடிவாரத்தில் பெய்த பெரு மழை ஒவ்வொரு ஊரிலுள்ள குளம் கண்மாய் நிரம்பி வழிந்து கடைசியில் சிறிய அளவு நீர் கடலில் சேரும். திருச்சியில் காவேரி பார்க்கவும். மயிலாடுதுறையில் காவேரியை பார்க்கவும். தற்போது ஒவ்வொரு வீடும் குளம்தான். வீட்டில் நீந்தி விளையாடலாம். கப்பல் விட்டு மகிழலாம்


Vasan
அக் 25, 2025 18:19

ஒவ்வொரு தமிழனும் கப்பலோட்டிய தமிழன்.


duruvasar
அக் 25, 2025 12:05

நேற்றுதான் இந்த புயலை ஆந்திர பக்கம் திருப்பிவிட தீர்மானம் போடா வேண்டும் என்று பேசியதை கேட்ட புயல் பயந்து தானாகவே ஓடிவிட்டது என்றால் அது மிகையாகாது.


duruvasar
அக் 25, 2025 12:02

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இந்த மனுசங்க கையில சிக்கிக்ட்டு பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது


சமீபத்திய செய்தி