உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடு மேய்க்கும் தொழிலாளி மகள் கேட் தேர்வில் சாதித்து அசத்தல்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகள் கேட் தேர்வில் சாதித்து அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: தொட்டியம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்த ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளியின் மகள், 'கேட்' தேர்வில் தேசிய அளவில், 105வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமத்தில், ஆடு மேய்க்கும் விவசாய கூலி தொழிலாளி நீலிவனத்தான். இவரது மனைவி அமிர்தவல்லி. தம்பதியின் மூன்று பெண் குழந்தைகளில், இரண்டாவது மகளான விஜி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார்.கடந்த 2021ல் பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின், 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தொட்டியம் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லுாரியில் சீட் கிடைத்ததால், வேளாண் பொறியியல் துறையில் இளநிலை பயின்றார். இதில் தேர்ச்சி பெற்ற விஜி, முதுநிலை படிப்புக்காக, இந்த ஆண்டு நடந்த கேட் தேர்வு எழுதினார். அதில், இந்திய அளவிலான தர வரிசையில், 105வது இடத்தை பிடித்தார். தொட்டியம் கொங்கு நாடு இன்ஜினியரிங் கல்லுாரி தலைவர் பெரியசாமி மற்றும் பேராசிரியர்கள் மாணவி விஜியை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.,யில் நிலம் மற்றும் நீர் ஆதாரங்கள் பொறியியல் துறையில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றுள்ளார்.கூலி தொழிலாளியாக இருந்தாலும், தன் மகளின் சாதனைக்காக உறுதுணையாக இருந்த நீலிவனத்தானை பாராட்ட விரும்பினால், 97866 84702 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

சிட்டுக்குருவி
ஜூன் 15, 2025 17:59

இதுபோன்ற பொன்மகளுக்கு முடிந்தவர்கள் பண உதவிசெய்தால் அதை ஊடகங்களில் பதிவிட்டால் இதுபோன்ற நிலைமையில் உள்ளக்குழந்தைகளுக்கும் கல்வியில் ஆர்வம் மிகும் .நமக்கு வசதி இல்லையென்ற குறை மனப்பான்மை போகும்.சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும்.இன்று நான் அதற்காக முயற்சிப்பேன்.


Vel1954 Palani
ஜூன் 15, 2025 14:57

ஆடு வளர்க்கும் ஏழை தொழிலாளி என்று தலைப்பு கொடுத்து யிருக்கலாம் .


Anantharaman Srinivasan
ஜூன் 15, 2025 14:47

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகள் கேட் தேர்வில் சாதித்து அசத்தல் திராவிட மாடல் மந்திரி போய் வாழ்த்து கூறி புகைப்படமெடுத்து போஸ்டர் அடித்து ஒட்டிக்கொள்வார்.


Suresh Velan
ஜூன் 15, 2025 15:45

இப்படியே போனால் திருட்டு திராவியடியா dmk கு போஸ்டர் அடிப்பது யார் , அந்த போஸ்டருக்கு பசை தடவுவது யார் , திருட்டு திராவிடியா dmk யே சிந்தித்து பார்த்தாயா , இனி சின்ன சுடலை மகனைத்தான் போஸ்டர் அடிக்க அனுப்ப வேண்டும் , ஹா ஹா ஹா


Ramesh Sargam
ஜூன் 15, 2025 11:55

வாழ்த்துக்கள். சாதிக்க வறுமை ஒரு அளவு கல் இல்லை என்பதை நிரூபித்திருக்கும் இந்த மாணவிக்கு ஒரு வாழ்த்து கூறுங்கள். IIT, Kharagpur -இல் இடம் கிடைத்திருப்பதும் ஒரு சாதனைதான்.


M Ramachandran
ஜூன் 15, 2025 11:37

திராவிட மாயை திருட்டு திராவிட குடும்ப அரசியலுக்கு அதிர் வேட்டு. மக்களெ உஷார்.உங்க ஓட்டை புடுங்கிக பணப்பை சகிதம் திருட்டு கும்பல் வரும் ஜாக்கிரதை. மதி மயங்கிடாதீர்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 15, 2025 11:06

ஏழைத் தொழிலாளி மகள் என்று தலைப்பில் போட்டு இருக்கலாம். ஆடு மேய்ப்பதும் வளர்ப்பதும் அதிக இலாபம் தரக்கூடிய தொழிலாக இருந்தாலும் வாசகர் மனதில், அது ஏதோ ஒரு தரமற்ற பணியாக தோன்ற வாய்ப்பிருக்கிறது


Rathna
ஜூன் 15, 2025 11:06

குடும்பத்தின் உயர்வை கொண்டு செல்லும் பெண் ரத்தினம். வாழ்த்துக்கள். பெண்கள் எல்லா துறையிலும் முன்னோடியாக இருக்கிறார்கள். நீட் போன்ற தகுதி தேர்வு இல்லாவிட்டால் தான் MBBS சீட்களை 5 கோடி ரூபாய்க்கு ஏலம் போட முடியும். இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் கஷ்டப்பட்டு பல நூறு கோடி ரூபாய்க்கு மெடிக்கல் காலேஜ் கட்டி என்ன பயன்? ஒரு கல்லூரியில் 300 சீட் இருந்தால் குறைந்த பட்சம் 300 பெருக்கல் 3 கோடி = தொள்ளாயிரம் கோடி வருமான வரி இல்லாமல் சம்பாதிப்பது எப்படி?


ஆரூர் ரங்
ஜூன் 15, 2025 10:41

கேட் தேர்வு இருப்பது தெரியாவிட்டாலும் இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான். அவருக்கு முன் ஏழைகள் எவரும் படித்ததில்லை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 15, 2025 11:04

Graduate Aptitude Test in Engineering . பொறியியலில் முதுகலை பட்டம் பெற இது நுழைவுத்தேர்வு. இதில் அதிக மதிப்பெண் பெற்றால் நாட்டின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அத்துடன் ஒன்றிய அரசின் உதவித்தொகை மாதம் ஐயாயிரமும் இரண்டாண்டுகளுக்கு கிடைக்கும். இப்படி ஒரு தேர்வு இருப்பதையே நாம் டமில் மாணவர்கள் அறிந்துகொள்ளாத வகையில் கழக கல்வித் தந்தையர்கள் இலட்சக்கணக்கில் பணம் கறந்துகொண்டு பயனற்ற காகிதப் பட்டம் வழங்கி வருகிறார்கள்.


Amar Akbar Antony
ஜூன் 15, 2025 10:37

இப்போது தான் தெரிகிறது மூன்றாம் மொழியின் முக்கியத்துவம். இந்த சமயத்தில் அந்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கும் வேளையில் இட ஒதுக்கீடு கொடுத்த அந்த மறத்தமிழன் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் நினைத்து பார்க்கவேண்டும். சமயோஜித்தனமாக ஒதுக்கீட்ட்டை அறிவித்தாரே அதற்குத்தான். தன்மானமுள்ள எந்தத்தமிழனும் இந்த தமிழனை புறந்தள்ளக்கூடாது. மாணவிக்கு வாழ்த்துக்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 15, 2025 10:57

நல்ல கருத்து .


Paramasivam
ஜூன் 15, 2025 21:39

கேட் தேர்வில் தகுதி பெற்று முதுநிலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை மாதம் 12,400 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது.


கண்ணன் திருச்சி
ஜூன் 15, 2025 09:30

அது என்னய்யா ஆடு மேய்க்கும் தொழிலாளி??! எளிய குடும்பத்தலிருந்து என எழுதுங்களேன்! ஆடுமேய்பது தாழ்வோ என்ஜினியர் ஆக இருப்பது உயர்வோ இல்லையே??! என்ன உலகம் இது?


கல்யாணராமன்
ஜூன் 15, 2025 09:59

எப்படி எழுதினாலும் இப்படி சொல் சொல்வதற்கு என்றே உங்களை போன்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.


Bala Murugan
ஜூன் 17, 2025 06:00

சரியாக சொன்னீர்கள் தோழரே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை