| ADDED : டிச 05, 2025 07:13 AM
சசிகலாவுக்கு கொலை மிரட்டல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அ.தி.மு.க.,வில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறி வருகிறார். இந்நிலையில், த.வெ.க.,வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது சசிகலாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க.,வில் பதவி இல்லாமல் அதிருப்தியில் உள்ளவர்களை, சசிகலா தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததால் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவின் சித்தி மன்னார்குடியில் இறந்தார். அப்போது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா செல்லவில்லை. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை காரணமாகவே சசிகலா செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். - நமது நிருபர் -