உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை

மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை

சினிமாவில் கதை ஒரு பக்கம், கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். தி.மு.க., சினிமாத்தனம் செய்து வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்று கிறது . இதுபோன்ற திறமை தி.மு.க.,வுக்கு கைவந்த கலை . நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைத்ததே காங்., தான். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனைவி தான் நீட் தேர்வுக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். 'என் தந்தை அறிவுஜீவி, என் தந்தை முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார்' என, துணை முதல்வர் உதயநிதி அப்போது பேசினார். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என, முதல்வர் ஸ்டாலின் பெரிய காமெடி செய்கிறார். - செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை