உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சி கொள்கைகள் அறிவிப்பு

கட்சி கொள்கைகள் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நேற்று மாலை 4:00 மணிக்கு துவங்கியது. மாநாடு மேடைக்கு வந்த கட்சித் தலைவர் விஜய், அங்கு அமைக்கப்பட்டிருந்த, 'ரேம்ப்' வழியே தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி நடந்து சென்று, மாநாட்டு முகப்பில் அமைக்கப்பட்டிருந்த, 100 அடி உயர கொடிக்கம்பத்தில், கொடி பாடல் இசைக்க, 'ரிமோட்' வாயிலாக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, கட்சியின் கொள்கைகளை பேராசிரியர் சம்பத்குமார் வாசித்தார்.அதன் விபரம்:'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்போம்ஜாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலின அடையாளம் என்ற அடிப்படையில், மனித சமூகத்தை சுருக்கிடக் கூடாதுமக்களை பாகுபடுத்தாமல், சம உரிமைகளை வகுக்க வேண்டும்மாநில, மத்திய அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்விகிதாச்சார ஒதுக்கீடே உண்மையான சமூக நீதி ஒதுக்கீடுஎல்லா வகையிலும் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்இரு மொழிக் கொள்கைகளே த.வெ.க., மொழிக் கொள்கைமாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பதுதமிழை வழக்காடு மொழியாக்குவதுமதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைப்பதுபகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதுதமிழகத்தின் பானமாக பதநீர் அறிவிக்கப்படும்பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பதுஅரசு, தனியார் துறையில் ஊழலற்ற நிர்வாகம்போதையில்லாத தமிழகம் படைப்போம்சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்போம்அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் கதர் ஆடை அணிய வேண்டும்தமிழகம் முழுதும் புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும்கவர்னர் பதவி அகற்றப்படும்காமராஜர் மாதிரி பள்ளிகள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும்ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்தமிழ் வழியில் பயில்வோருக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை