உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் தொடரமைப்பு நிறுவனம் அமைக்க தாமதம் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல்

மின் தொடரமைப்பு நிறுவனம் அமைக்க தாமதம் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல்

சென்னை, : தமிழகத்தில், 'ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் யூடிலிட்டி' எனப்படும், மாநில மின் தொடரமைப்பு நிறுவனம் அமைக்க, தமிழக அரசு தாமதம் செய்து வருவதால், அதிக திறன் உடைய துணைமின் நிலையங்கள் அமைப்பதிலும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம், 765, 400, 230 கிலோ வோல்ட் திறனில், துணைமின் நிலையங்களை, தனியார் நிறுவனங்கள் வாயிலாக அமைக்கிறது. ஒப்பந்த நிறுவனங்கள், துணைமின் நிலைய கட்டுமான பணி முடிந்ததும், மின் வாரியத்திடம் ஒப்படைத்து விடுகின்றன. அமல்படுத்தியது அதன்பின், தொடரமைப்பு கழகம் இயக்கி, பராமரிக்கிறது. துணைமின் நிலையம் அமைக்க, போதிய நிதி இல்லாததால், மத்திய மின் துறை, ஜெர்மனியின் கே.எப்.டபிள்யூ., வங்கி போன்றவற்றில், மின் வாரியத்திற்கு கடன் வாங்கப்படு கிறது. எனவே , துணைமின் நிலையங்கள் அமைப்பதில், தனியார் முதலீட்டை ஈர்க்க, மத்திய மின் துறை அறிவுறுத்தலின் படி, புதிய விதிகளை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டில் அமல்படுத்தியது. அதன்படி, துணைமின் நிலையம் அமைக்க, 'டெண்டர்' கோருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, 'மாநில மின் தொடரமைப்பு நிறுவனம்' என்ற புதிய நிறுவனத்தை, தமிழக அரசு உருவாக்க வேண்டும். ஆனால், இன்னும் அதை துவக்கவில்லை. மாநிலம் முழுதும், கூடுதல் மின்சாரம் எடுத்து செல்ல, வடசென்னை, கள்ளக்குறிச்சி, அரியலுார், கோவை மற்றும் விருதுநகரில், 765 கி.வோ., துணைமின் நிலையங்கள் அமைக்கப் படுகின்றன. இதில், கோவை தவிர, மற்ற மூன்று துணை மின் நிலையங்களை, மின் வாரியம் அமைத்துள்ளது. நெறிமுறைகள் கோவை துணைமின் நிலைய பணிகளை விரைவாக முடிக்க, தனியார் நிறுவனங்களே இயக்கி, பராமரிக்கும் வகையில், 'டெண்டர்' கோரும் பணியை, மாநில தொடரமைப்பு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிறுவனத்தை அரசு இன்னும் துவக்காததால், துணை மின் நிலையங்கள் அமைப்பதில், தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கோவை துணைமின் நிலையம் அமைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாநில மின் தொடரமைப்பு நிறுவனத்தின் பணி, பணிபுரிவோர் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன. விரைவில் தனி நிறுவனம் உருவாக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை