உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.சி., தி.மு.க., கருத்து வேறுபாடு வலுக்கிறது

வி.சி., தி.மு.க., கருத்து வேறுபாடு வலுக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கேட்ட விவகாரத்தால், தி.மு.க.,வுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வலுத்துள்ளது. 'சினிமா நடிகர் உதயநிதி துணை முதல்வராகும் போது, திருமாவளவன் ஆகக்கூடாதா' என கேள்வி எழுப்பிய நிர்வாகியை நீக்க வேண்டும் என, வி.சி.,க்கு தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.வி.சி., கட்சியின் துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'ஆந்திர சட்டசபை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனி பெரும்பான்மை பெற்றது. 'ஆனாலும், கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கு, துணை முதல்வர் பதவியை நாயுடு வழங்கினார். அதுதான் அரசியல் முதிர்ச்சி. 'சினிமா நடிகர் உதயநிதி துணை முதல்வராகும் போது, ஒரு கட்சியின் தலைவரான திருமாவளவன் ஏன் ஆகக்கூடாது? திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும் என்பது எங்கள் தொண்டர்களின் விருப்பம்' என்றார்.அவரது கருத்து, தி.மு.க.,வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா, பலமாக கண்டித்துள்ளார்.

நெருக்கடி

வி.சி., கட்சியில் புதிதாக சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, விபரம் தெரியாமல் பேசியுள்ளார்; இது, கூட்டணிக்கு நல்லதல்ல. ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜா கூறினார்.கூட்டணி கட்சிகள் என்றாலும், தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்பதற்கு, சமீபத்திய நிகழ்வுகள் ஆதாரம். மது ஒழிப்பு மாநாடு, கூட்டணி ஆட்சி என, விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கும் பிரச்னைகள் அரசுக்கு நெருக்கடி தந்ததால், திருமாவை அழைத்து பேசி, தி.மு.க., சமரசம் செய்தது.

கோரிக்கை

இனி பிரச்னை எழாது என, தி.மு.க.,வும், அதன் தலைவர்களும் நம்பியிருந்த நிலையில், கூட்டணி ஆட்சி கோரிக்கைக்கு புது வடிவம் தந்திருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வராக பதவி உயர்வு அளிப்பது பற்றி, முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுக்காமல் பரிசீலித்து வரும் நிலையில், திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆகக்கூடாது? என, போர்க்கொடி துாக்கிஇருக்கிறார் வி.சி., நிர்வாகி ஆதவ் அர்ஜுனா. இதனால், தி.மு.க.,வுக்கு கோபம் அதிகரித்து, கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடுமோ என வி.சி., நிர்வாகிகள் சிலருக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்தும் விதமாக, வி.சி., பொதுச்செயலர் ரவிக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். 'சனாதனிகளின் அரசியலை வீழ்த்துவது என்ற நம் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. நம் எதிரிகள் தமிழகத்தை குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். தமக்கு எதிர்ப்பாக உள்ள ஓட்டுகளை சிதறடிப்பது அவர்களின் உத்திகளில் ஒன்று. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், நாம் விழிப்போடு இருக்க வேண்டும்' என்று ரவிக்குமார் கூறியுள்ளார். தி.மு.க., கூட்டணி உடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை, அவரது அறிக்கை வலியுறுத்துகிறது.

அயராத உழைப்பு

எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, சிந்தனைச்செல்வன், ஷாநவாஸ் என திருமா கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.,க்களுமே ரவிக்குமார் போன்று தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இருப்பினும், ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தி.மு.க.,வின் கோரிக்கையை, அவர்கள் ஆதரிக்கவில்லை என்று ஒரு நிர்வாகி கூறினார்.'நாட்டு நடப்பை அவர் அலசியிருக்கிறார். ஆந்திர அரசியலில் நடந்த சம்பவத்தை ஒரு முன் உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். இதை ஒரு குற்றமாக கருத தேவையில்லை' என்றும் அவர்கள் கூறுகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களின் அயராத உழைப்பு இல்லாமல், வட மாவட்டங்களில் தி.மு.க., வெற்றி பெற இயலாது என்ற கருத்தும் எதார்த்தமானது தான்; உள்நோக்கம் உடையது அல்ல என அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

சாண்டில்யன்
செப் 25, 2024 00:12

ஆதவ் உறவாடி கெடுக்க வந்தவன் போல இருக்கு


எஸ் எஸ்
செப் 24, 2024 20:18

மெஜாரிட்டி இல்லாமல் காங்கிரஸ் ஆதரவுடன் 2006இல் ஆட்சி அமைத்த போதே திமுக அக்கட்சிக்கு அமைச்சர் பதவி கூட தரவில்லை. இப்போது விசி கட்சிக்கு மட்டும் தந்து விடுமா என்ன?


Tiruchanur
செப் 24, 2024 20:10

ரெண்டு பேரும்,the vidiyal ஆட்சி நடத்துற கட்சி, குருமா கட்சி வீதியில சண்டை போடுக்கங்க. நாடாவது உருப்படும்


முருகன்
செப் 24, 2024 19:20

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பழமொழி ஞாபகம் வருகிறது


mindum vasantham
செப் 24, 2024 19:06

திமுக சொம்பு அடிச்சா நல்லவனா


nv
செப் 24, 2024 17:15

கூட்டு களவாணிகள் பங்கு பிரிப்பதில் என்றாவது ஒருநாள் சண்டை வரத்தானே செய்யும்? நம்ம மக்களுக்கு அறிவு வந்தால் சரி.


Ms Mahadevan Mahadevan
செப் 24, 2024 15:09

எத்தனை காலம் தான் சிங்கி ஆட்டிப்பது? நாங்களும் பதவி சுகம் அனுபவித்திக்கொள்கிறோம் . இனியாவது கூட்டணி இல்லாமல் தனித்து போட்டி இட்டு உண்மையான ஜநாயகத்தை கட்சிகள் நிலைநாட்ட வேண்டும் 20 சதவீத ஓட்டு வாங்காத காட்சிகள் கலைக்கப் பட வேண்டும் . அதிக காட்சிகள் இருப்பது நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2024 15:02

ஆதவ் அர்ஜுனின் கருத்து ஒரு ஜனநாயக கருத்து, ஒத்துக்கொள்வதும் , தனித்து போவதும் திமுகவின் விருப்பம் , அதற்காக ஒரு ஜனநாயக கருத்தினை வசை பாடுவது சர்வாதிகரித்தனத்தானே ஒழிய வேறில்லை


pandit
செப் 24, 2024 14:20

எதை மடை மாற்ற இந்த நாடகம்


sankaranarayanan
செப் 24, 2024 11:47

சினிமா நடிகர் உதயநிதி துணை முதல்வராகும் போது, ஏன் திருமாவளவன் ஆகக்கூடாதா என கேள்வி சரியான கேள்விதான் ஆதவ் சொல்லியிருக்கிறார். சினிமா இயக்குனர் ரஞ்சித் லாட்டரி மேலாளர் மார்ட்டின் இவர்களது உதவிகளுடன் களம் இறங்கும் விசிக இனி மாபெரும் கட்சியாக திகழப்போகிறது திமுகவிற்கு ஐநூற்று ஐம்பது கோடி பத்திரம் மூலமாக வழங்கியவர் மார்ட்டின் சும்மா விடுவாரா பணத்தை கொடுத்து பதவியை கேட்கிறார் இதில் தவறொன்றுணமே இல்லையே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை