உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது

வீட்டு மனை அங்கீகாரத்துக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம்: துணை பி.டி.ஓ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி : வீட்டு மனை அங்கீகாரம் தருவதற்கு ரூ.50,000 லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணை பி.டி.ஓ., இளங்கோவன் கைது செய்யப்பட்டார்.பரமக்குடி தாலுகா எஸ்.அண்டக்குடி ஊராட்சியில் உள்ள இடத்தை, ராமநாதபுரம் நகர ஊரமைப்புத்துறையில் மனையிட அனுமதியை ஒருவர் பெற்றுள்ளார். அரசுக்கு உள்ளாட்சி மனை வரன்முறைப்படுத்தல் கட்டணமாக ரூ. 3,47,800 ஐ கடந்த மாதம் செலுத்தியுள்ளார்.அந்த இடத்திற்கு உள்ளாட்சி அனுமதி பெற கடந்த வாரம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக பி.டி.ஓ., அன்புக்கண்ணனை சந்தித்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனை 49, தொடர்பு கொள்ள கூறியுள்ளார். இளங்கோவனை சந்தித்து விவரம் கேட்ட போது, ஒரு வாரம் கழித்து வர கூறியுள்ளார். பின்பு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது, 'உங்க பைல் ரெடி செய்ய, எனக்கும், அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து ரூ. 1,00,000 லஞ்சம் தர வேண்டும்' என்று கேட்டுள்ளார்.நேற்று( டிச.,10) காலை இளங்கோவனை பார்த்து விவரம் கேட்ட போது, அவர் ஏற்கனவே கூறியது போல், இன்று (டிச.,11) 50,000 ஆயிரம் ரூபாயும், மீதி பணம் ரூ. 50,000 ஆயிரம், வரும் வெள்ளிக்கிழமை கொடுக்கவும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாமல், மனுதாரர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய பணம் ரூ.50,000 ஆயிரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவனிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
டிச 11, 2025 22:22

லஞ்சம் வாங்கும் போது மாட்டிக்கொண்டாலும் பெரிய தண்டனையின்றி தப்பி மீண்டும் பதவியில் தொடர முடியும் என்ற தைரியத்தில் தான் அதிகாரிகள் பயப்பபடாமல் லட்சங்களில் கேட்கின்றனர்.


தாமரை மலர்கிறது
டிச 11, 2025 19:52

தினம் தினம் ஒருவர் பிடிபடுகிறார். இருந்தும் லஞ்சம் நிற்கவில்லை. லஞ்சம் வெறும் நூறு அல்லது இருநூறு ரூபாய் அல்ல. திருட்டு மாடல் ஆட்சியில் பத்தாயிரத்திலிருந்து லட்சங்களில் லஞ்சம் செழித்து ஓங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளமே தேவை இல்லை. லஞ்சம் மட்டுமே சம்பளத்தைவிட பத்து மடங்கு அதிகம்.


D Natarajan
டிச 11, 2025 18:58

உடன் பதவி நீக்கமும் செய்யவேண்டும். எங்கும் எதிலும் லஞ்சம். கேவலமான அரசு அலுவலர்கள். எந்த பண உதவிகளையும் எல்லா அரசு ஊழியர்களுக்கும் கொடுக்கக்கூடாது.


NAGARAJAN M
டிச 11, 2025 18:50

இதுவரை அவர் வாங்கிய பணம் மற்றும் சம்பளம் முழுவதும் பறிமுதல் செய்ய வேண்டும், வேலை விட்டு தூக்க வேண்டும்


kalyanasundaram
டிச 11, 2025 17:53

WHY TO ARREST THIS PERSON SINCE HE WOULD HAVE REFUSED TO SHARE WITH A MINISTER OR SO.SUCH ARE ACCEPTED IN TAMIL NADU


Devaraj
டிச 11, 2025 17:37

இது எல்லாம் ஒரு பொழப்பு


Devaraj
டிச 11, 2025 17:36

எவ்ளோ பணம் வாங்குவது ஒரு கணக்கு வழக்கு இல்லையா சாமி இவன் மனித மிருகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை