மேலும் செய்திகள்
காஸ் வாடிக்கையாளர் சரிபார்ப்புக்கு ரூ.300 வசூலா
47 minutes ago
வலை வளை பகுதிக்கு
3 hour(s) ago
மதுரை: சினிமா செய்திகள்
3 hour(s) ago
சினிபிட்ஸ் 1
3 hour(s) ago
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - பாலகிருஷ்ண ரெட்டி: ஓசூர் விமான நிலைய திட்டத்துக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓசூரில் ஏற்கனவே அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு, விவசாயிகள் நிலங்களை கொடுத்து விட்டனர். அங்குள்ள தனியார் விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து, விவசாயிகள் நிலத்தை எடுக்க முயற்சிப்பது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பரந்துாரில் 80 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. இதேபோல், ஓசூர் விவசாயிகள் நலனையும் கருத்தில் வைத்து, விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும். அமைச்சர் செங்கோட்டையன்: உறுப்பினர்கள் சார்பில், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. வளர்ச்சி திட்டங்க ளை செயல்படுத்த, விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது. விவசாய நிலங்களை எடுக்காமல், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார். ராசி மணல் அணை திட்டம் வேண்டும் சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பாலகிருஷ்ண ரெட்டி பேசியதாவது: கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை, தமிழகம் எதிர்க்கிறது. இதில் எதிர்ப்பு மட்டும் போதாது; மாற்று வழிமுறையாக, ராசி மணல் அணை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக எல்லை பகுதியான ஒகேனக்கல் அருகில், காவிரியின் குறுக்கே ராசி மணல் அணை மற்றும் நீர்மின் திட்டம், காமராஜர் காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தினால், தமிழகத்துக்கு அதிக பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
47 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago